முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க. அழகிரியிடம் புகார் மனு கொடுதவர்கள் மீது தி.மு.க.வினர் தாக்குதல்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,பிப்.28 - மதுரையில் மத்திய மந்திரி மு.க. அழகிரியிடம் புகார் மனுக்கொடுத்துவிட்டு திரும்பிய பெண்கள் உள்பட பலர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக தி.மு.க.பெண் கவுன்சிலரின் கணவர் உள்பட 3 தி.மு.க. பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை மேலவாசலில்  நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய மந்திரி மு.க. அழகிரி கலந்துகொண்டு உப்பு தண்ணீரை குடிநீராக்கும் எந்திரத்தை தொடங்கிவைத்தார். திறந்துவைத்துவிட்டு அழகிரி திரும்பும்போது அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண்ணும் அவரது கணவர் அம்சராஜ்  மற்றும் பல பெண்களும் சேர்ந்து மு.க. அழகிரியிடம் ஒரு புகார் மனுவை கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அழகிரியிடம் மாரியம்மாள் மற்றும் அவருடன் வந்தவர்களும் சேர்ந்து, தங்களுடைய 31-வது வார்டு தி.மு.க

 பெண் கவுன்சிலர் அய்யம்மாள் மீது புகார் செய்தனர். எங்கள் வார்டில் சுகாதார வசதியே செய்து கொடுக்கவில்லை. பன்றி மற்றும் கொசு தொல்லைகள் அதிகமாக இருக்கிறது. வார்டு முழுவதும் குப்பையாக கிடக்கிறது. மக்களுக்கு தேவையான சுகாதார பணிகளை அவர் செய்வதில்லை. தன்னுடைய சொந்த வேலையை செய்வதிலேயே கவனமாக இருக்கிறார் என்று அய்யம்மாள் மீது மாரியம்மாள் மற்றும் அவருடன் வந்தவர்களும் புகார் செய்தனர். மாரியம்மாளிடம் அழகிரியும் மனுவை பெற்றுக்கொண்டு போய்விட்டார். ஆனால் தி.மு.க. பெண் கவுன்சிலர் அய்யமாளின் கணவர் கணேசன் தி.மு.க. ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்த முனியாண்டி, தி.மு.க. பிரமுகர் பழனிசாமி ஆகியோர் திரண்டு வந்து மாரியம்மாள் அவரது கணவர் அம்சராஜ்,கூட்டாளி சித்திரவேலு மற்றும்   அவர்களுடன் வந்த சில பெண்களிடம் ஏன் என் மனைவி மீது அழகிரியிடம் புகார் செய்தீர்கள் என்று கண்டித்துள்ளார். இதனால் ஒருவருக்கொருவர் வாய்ச்சண்டை போட்டனர். கடைசியில் இந்த வாய் சண்டையானது முற்றவே மாரியம்மாள் மற்றும் அவருடன் சேர்ந்த வந்த சில பெண்கள் மேலும் அம்சராஜ், கூட்டாளி சித்திரவேலு ஆகியோர்  மீது கணேசன் மற்றும் முனியாண்டி,பழனிசாமி  சேர்ந்து தாக்கினர். உடனே அம்சராஜ் கூட்டாளி சித்திரவேலு திடீர் நகர் காவல் நிலையத்திற்கு சென்று கணேசன், முனியாண்டி,பழனிசாமி ஆகியோர் மீது புகார் செய்தார். அதோடு மட்டுமல்லாது கணேசன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தை சித்திரவேலுடன் அம்சராஜ் மற்றும் மாரியம்மாள் உள்பட பல பெண்கள் முற்றுகையிட்டனர். இதற்கிடையில் மாரியம்மாள், அம்சராஜ், சித்திரவேலு மற்றும் பல பெண்கள் மீது கணேசன், முனியாண்டி, பழநிசாமி ஆகியோர் சேர்ந்து புகார் செய்தனர். இருதரப்பிலும் புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரித்து கணேசன்,முனியாண்டி, பழனிசாமி ஆகிய 3 பேர்களையும் கைது செய்தனர். இதற்கிடையில் தி.மு.க. மேலிடத்தில் இருந்து வற்புறுத்தல் வந்ததோ என்னவோ தெரியரில்லை. கைது செய்யப்பட்ட அந்த 3 பேர்களையும் போலீசார் ஜாமீனில் வெளியேவிட்டுவிட்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்