முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவு அணி 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

பிரிட்ஜ்டவுன், ஜூலை. 1 - இந்திய அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்று வரும் 2- வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி 2 -வது நாளன்று மழையால் பாதிக் கப்பட்டது. இதனால் வீரர்கள் ஓய்வறையிலேயே பெரும்பாலும் இருந்தனர். மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில், மே.இ.தீவு அணி முதல் இன் னிங்சில் 37.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்னை எடுத்து இருந்தது. 2 -வது நாளன்று முதல் நாள் இரவு பெய்த மழை காரணமாக ஆட்டம் தாமதமாக துவங்கியது. 

மே.இ.தீவு அணி மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டி பார்படோஸ் தீவில் பிரிட்ஜ்டவுன் நகரில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இதில் முன்னதாக முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 68 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 201 ரன்னை எடுத்தது. லக்ஷ்மண் 85 ரன்னையும், ரெய்னா 53 ரன்னையும் எடுத்தனர். தவிர, பிரவீன் குமார் 12 ரன்னையும், விஜய் 11 ரன்னையும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ராம் பால் 38 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். எட்வர்ட்ஸ் 56 ரன் னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். பிஷூ 46 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, சம்மி 1 விக்கெட் எடுத்தார். 

முதல் நாள் பிற்பகுதியில் முதல் இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவு அணி 12 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 30 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது, சர்வான் 10 ரன்னுடனும், பிஷூ கணக்கைத் துவக்காமலு ம் இருந்தனர். 

முதல் நாள் இரவு மழை பெய்ததால் மைதானம் ஈரப்பதத்துடன் கா ணப்பட்டது. இதனால் ஆட்டம் காலதாமதமாக துவங்கியது. மதிய உணவு இடைவேளைக்கு முன்பும், பின்பும் சிறிது நேரமே ஆட்டம் நடந்தது. 

உணவு இடைவேளைக்கு முன்னதாக மே.இ.தீவு அணி 16.5 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. உணவு இடைவேளையின் போது, அந்த அணி 29 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 82 ரன்னை எடுத்து இருந்தது. அப்போ து, சந்தர்பால் 12 ரன்னுடனும், சாமுவேல்ஸ் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

மதியம் தேனீர் இடைவேளையின் போது, அந்த அணி 37.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது சந்தர் பால் 20 ரன்னுடனும், சாமுவேல்ஸ் 21 ரன்னுடனும் களத்தில் இருந்த னர். பின்பு மழை பெய்ததால் இதே ஸ்கோரே கடைசி வரை நீடித்தது.

2 -வது நாள் ஆட்டத்தின் போது, பிஷூ 13 ரன்னிலும், சர்வான் 18 ரன் னிலும் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டையும், பிரவீன் குமார் மற்றும் மிதுன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்