முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவுவால் நெடுஞ்சாலை மூடல்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர். பிப்.28 - காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக அம்மாநிலத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நேற்று இரண்டாவது நாளாக மூடப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில்  கடந்தத சில நாட்களாக கன மழையும் கடுமையான பனிப்பொழிவும் காணப்படுகிறது. இதனால் சாலைகளில் நிலச்சரிவு மற்றும் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன. இதனால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நேற்று இரண்டாவது நாளாக மூடப்பட்டது. இதனால் இந்த சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் மிக முக்கியமான ஜவஹர் சுரங்கப்பாதையில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் 81 பயணிகள் வாகனங்கள் உள்பட மொத்தம் 370 வாகனங்கள் நடுவழியில் சிக்கிக்கொண்டுள்ளன.

சாலைகளில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.ஜம்மு  - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 294 கி.மீ. சாலைகளை சீர்படுத்தும் பணிகள் முடிந்த பிறகே நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்