முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பிரதேச பள்ளிகளில் பகவத்கீதை பாடம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

போபால்,ஜூலை.3  - மத்திய பிரதேசத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் பகவத்கீதை பாடமாக நடத்தப்பட உள்ளது. பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குருஷேத்திரத்தில் நடந்த போரின் போது அர்ஜூனனுக்கு கிருஷ்ணன் உபதேசித்த வாழ்க்கை நெறிமுறைகள்தான் பகவத்கீதையாகும். இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் இது உலகின் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இதை போதிக்க முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு முடிவெடுத்தது. இது நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது. இந்நிலையில் இதற்கான பாடங்கள் அனைத்து பள்ளிக் கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு அது பாடமாக நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

நீதிபோதனை, விளையாட்டு போன்று பகவத்கீதையும் ஒரு பாடமாக இருக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். முதல் வகுப்பில் இருந்து 10 ம் வகுப்பு வரை பகவத்கீதை பாடம் அரசு பள்ளிக் கூடங்களில் போதிக்கப்படவுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு இந்துக்கள் அல்லாதோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்த போதிலும் பகவத்கீதையை பாடமாக போதிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்