முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராவை நோக்கி... இந்திய அணி 240 ரன் முன்னிலை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

பிரிட்ஜ்டவுன், ஜூலை. 3 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுன் நகரில் நடந் து வரும் 2 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 240 ரன் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டி டிராவை நோக்கி செல்கிறது. 

இந்திய அணியின் 2 - வது இன்னிங்சில் லக்ஷ்மண் மற்றும் டிராவிட் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்தனர். முகுந் த் மற்றும் கோக்லி இருவரும் அவர்களுக்கு பக்கபலமாக ஆடினர். 

4 - வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 -வது இன்னிங்சில் 89 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்னை எடுத்து இருந்தது. மொ த்தம் 240 ரன் முன்னிலை பெற்று இருந்தது. இன்று 5 -வது நாளாகும். எனவே இந்தப் போட்டி டிரா ஆக அதிக வாய்ப்பு உள்ளது. 

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது கிரிக்கெட்டெஸ்ட் போட்டி பார்படோஸ் தீவில் பிரிட்ஜ்டவு ன் நகரில் உள்ள கென்சிங்டன்ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில், 201 ரன்னை எடுத்தது. லக்ஷ்மண் 85 ரன்னையும், ரெய்னா 53 ரன்னையும் எடுத்தனர். எட்வர்ட்ஸ்,ராம்பால், மற்றும் பிஷூ ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி 73.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 190 ரன்னில் சுருண்டது. அந்த அணி சார் பில், சாமுவேல்ஸ் 172 பந்தில் 78 ரன்னை எடுத்தார். தவிர, சந்தர்பால் 37 ரன்னை எடுத்தார். சர்வான் 18 ரன்னையும், சம்மி 15 ரன்னையும் எடுத்தனர்.  

இந்திய அணி தரப்பில், இஷாந்த் சர்மா 55 ரன்னைக் கொடுத்து 6 விக் கெட் எடுத்தார். மிதுன் 34 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்டைக் கைப் பற்றினார். தவிர, பிரவீன் குமார் மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

அடுத்து 2 -வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 4 -வது நாள் ஆட்ட நேர முடிவில் 89 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்னை எடுத்து இருந்தது. மொத்தத்தில் 240 ரன் முன்னிலை பெற்று இருந்தது. 

இந்திய அணி சார்பில், லக்ஷ்மண் 171 பந்தில் 72 ரன்னை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம்.கோக்லி 98 பந்தில் 26 ரன்னை எடுத்து இருந்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். 

முன்னதாக துவக்க வீரர் முகுந்த் 81 பந்தில் 48 ரன்னை எடுத்தார். இதி ல் 6 பவுண்டரி அடக்கம். முன்னாள் கேப்டன் டிராவிட் 171 பந்தில் 55 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் எட்வர்ட்ஸ் வீசிய பந்தில் சர்வானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்