முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் பட்டம் பெற்றார் விட்டோவா

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன்,ஜூலை.- 4 - விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதி சுற்றில் செக் குடியரசின் பெட்ரா விட்டோவா ரஷியாவின் மரியா ஷரபோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இறுதி சுற்றில் விட்டோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் மரியா ஷரபோவாவை வீழ்த்தினார். விம்பிள்டன் பட்டம் வெல்லும் மூன்றாவது செக் குடியரசு வீராங்கனை விட்டோவா என்பது குறிப்பிடத்தக்கது. மார்ட்டினா நவரத்திலோவா, ஜானா நோவட்னா ஆகியோர் விம்பிள்டனில் பட்டம் வென்ற செக் குடியரசை சேர்ந்த மற்ற இருவர். கடந்த 2004 ல் விம்பிள்டனில் பட்டம் வென்ற ஷரபோவா இரண்டாவது முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் அவரின் பட்டக் கனவை விட்டோவா தகர்த்து விட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்