முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி கழகத்திற்கு ரூ.20 கோடி

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.1 - ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி கழகத்திற்கு ரூ.20 கோடி நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.  இது தவிர  நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மக்களைவையில் தெரிவித்தார். அதன் விபரம் பின் வருமாறு,

1. சென்னை பொருளாதார பள்ளிக்கு ரூ.10கோடி

2. கேரளா, மேற்கு வங்காளம், முர்ஷிதாபாத், அலிகார் இஸ்லாமிய பல்கலை கழக மையங்களுக்கு தலா ரூ.50 கோடி

3. கேரளா பூக்கோடு கால்நடை பராமரிப்பு மற்றும் விலங்கியல் பல்கலை கழகத்திற்கு ரூ.100 கோடி

4. மகாத்மாகாந்தி விஸ்வ ஹிந்தி வித்யாலய மையங்களை கல்கத்தா மற்றும் அலகாபாத்தில் அமைக்க தலாரூ.10 கோடி

5. கரக்பூர் இந்திய தொழில் நுட்ப கழகத்திற்கு ரூ.200 கோடி

6. கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை பல்கலைகழகத்திற்கு ரூ.20 கோடி

7. மெளலானா ஆஷாத் கல்வி அறக்கட்டளைக்கு ரூ. 200 கோடி

8. வளர்ச்சி பொருளாதார மையம் மற்றும் டெல்லி ரத்தன் டாட்டா நூலகத்திற்கு ரூ.10 கோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்