முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதியுடன் சொலிசிட்டர் ஜெனரல் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.12 - மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோபால சுப்பிரமணியம் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்தார். 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரவாதற்கு தனியார் வழக்கறிஞரை மத்திய அரசு நியமித்ததை தொடர்ந்து தான் பதவி விலகப் போவதாக கோபால் சுப்பிரமணியம் தெரிவித்தார். 

ஆனால் மத்திய சட்ட துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதியை கோபாலகிருஷ்ணன் சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து வீரப்ப மொய்லியிடம் கேட்ட போது தான் பெங்களூரில் இருப்பதாகவும், டெல்லி திரும்பிய பின்னர் விவரமாக பேசுவதாகவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்