முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கையை சுத்தப்படுத்த அனைவரும் ஒன்றுபடுவோம்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

பாட்னா,ஜூலை.12 - கங்கையை சுத்தப்படுத்த கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் உமா பாரதி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நமது கலாச்சாரம், பொருளாதாரம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது கங்கை நதி. அதனை மாசுபடுதலில் இருந்து பாதுகாக்க வேண்டும். கங்கையை தூய்மைப்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைய வேண்டும். கங்கை உற்பத்தியாகும் உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரியில் இருந்து இந்திய எல்லையை கடக்கும் மேற்கு வங்கத்தின் கங்காசாகர் வரையிலும் அதன் தூய்மையை பாதுகாக்க வேண்டும். அரசு மற்றும் சமுதாயத்தின் கூட்டு முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகும். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரை சந்தித்து பேசினேன். கங்கையை மாசுபடுத்துபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி கங்கோத்ரி முதல் கங்காசாகர் வரை மனித சங்கிலி நடத்தப்படும். கங்கையின் தூய்மையை வலியுறுத்தி டெல்லியில் சர்வதேச மாநாடு, பிரசார இயக்கமும் நடத்தப்படவுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்