முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநிலத்தில் 1,600 பெட்ரோல் பங்க்குகள் மூடல்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூலை.12 - கேரள மாநிலத்தில் கிட்டத்தட்ட 1,600 பெட்ரோல் பங்க்குகள் நேற்று மாநிலம் முழுவதும் மூடிக் கிடந்தன. அனைத்து கேரள பெட்ரோலிய வர்த்தகர்கள் சம்மேளனம் விடுத்த போராட்ட அழைப்பை ஏற்று இந்த பெட்ரோல் பங்க்குகள் மாநிலம் முழுவதும் மூடப்பட்டதாகவும், இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முழு அளவில் வெற்றி அடைந்ததாகவும் சம்மேளன தலைவர் அலெக்ஸ் விலகாவியல் தெரிவித்தார். 

பெட்ரோலியப் பொருட்கள் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்துகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். அபூர்வா சந்திர கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். அவ்வாறு அமல்படுத்தி டீலர்களின் கமிஷன்களை மாற்றியமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1,600 பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டதாகவும் சங்க தலைவர் அலெக்ஸ் தெரிவித்தார். 

இந்த கமிட்டி செய்த பரிந்துரைப்படி பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 39.05 பைசா கூடுதல் கமிஷன் தர வேண்டும். அதே போல் டீசலுக்கு 17 பைசா தர வேண்டும். ஆனால் மத்திய அரசோ பெட்ரோலுக்கு 25 பைசாவும், டீசலுக்கு 15 பைசா மட்டும் கமிஷனை உயர்த்தி அறிவித்துள்ளது என்று அலெக்ஸ் கூறி வேதனைப்பட்டார். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்