முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதுரங்கப் போட்டி: டால்பின் மெட்ரிக் பள்ளி சாதனை

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

மதுரை,ஜூலை.12 - விக்ரம் பொறியியல் கல்லூரியில் நடந்த 13 வயது பிரிவினருக்கான செஸ்போட்டியில் டால்பின் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்.

மதுரை-சிவகங்கை ரோடு விக்ரம்பொறியியல் கல்லூரியில் 13 வயது பிரிவு மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டிகள் நடந்தது. இதில் டால்பின் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி அனிதா பாரதி முதலிடத்தையும், மாணவர்கள் கிரிநாத், அஸ்வின்குமார், ஸ்ரீவத்சன் ஆகியோர் முதல் 3 இடங்களையும் பிடித்து பரிசு வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு விக்ரம் பொறியியல் கல்லூரி நிறுவனர் பரிசு வழங்கினார். இதன் மூலம் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிஅனிதாபாரதி, மாணவர்கள் கிரிநாத், அஸ்வின்குமார், ஸ்ரீவித்சன், சதுரங்கதலைமை பயிற்சியாளர் திருநாகலிங்கம், சிறப்பு பயிற்சியாளர்கள் கெளஸ் கமாருதீன், ரமணன் ஆகியோரை டால்பின் பள்ளி தாளாளர் ராமனாதன், முதல்வர் பத்மா ஆகியோர் பாராட்டி நினைவுப்பரிசினை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்