முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

புதன்கிழமை, 13 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

நெல்லை ஜூலை 13 -  நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். நிகழ்ச்சியில் எம்.பி, எம்.எல்.ஏ கலந்து கொண்டு வடம் பிடித்தனர். தமிழகத்தில் புகழ் பெற்ற சிவாலயங்களில் நெல்லை நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற ஆனித்திருவிழா இவ்வாண்டு கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும். நின்றசீர் நெடுமாறன் அரங்கில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருவிழாவின் உச்சநிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4.51 மணிக்குள் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து நெல்லையப்பர், காந்திமதி அம்மன் உற்சவர் சிலைகள் தேரில் எழுந்தருள 

செய்யப்பட்டது.

பின்னர் காலை 8 மணிக்கு ராமசுப்பு எம்.பி, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ டி.ஆர்.ஓ ரமணசரஸ்வதி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தோரோட்டத்தை துவக்கி வைத்தனர். கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாயா, நெல்லையப்பர் புகழ் ஓங்குக என்று கோஷமிட்டவாறு வடம்பிடித்து தேரை இழுத்தனர். நல்லையப்பர் தேரை தொடர்ந்து அம்பாள் தேர் இழுக்கப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு 4ரதவீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். வெளிநாட்டவரும் இந்த தேரோட்டத்தை கண்டு ரசித்தனர். தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோவில் பூசாரிகள் அபிஷேகம் வழங்கினர். தேரோட்டத்தை முன்னிட்டு எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து. 4ரத வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி போலீசார் கண்காணித்தனர். மாலை 5மணியளவில் தேர் நிலையம் வந்து சேர்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago