முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய அணி அறிவிப்பு

புதன்கிழமை, 13 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஜூலை. 13 - இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக 17 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் காம்பீர், யுவராஜ் சிங், ஜாஹிர்கான், ஸ்ரீசாந்த் மற்றும் ரித்திமான் சகா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தலைமையில் இங்கிலாந்தி ல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலா  ன அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டி, ஒரே ஒரு டி - 20 போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டி ஆகிய வை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.  வரும் 21 -ம் தேதி முதல் செப் டம்பர் மாதம் 16 -ம் தேதி வரை இந்தத் தொடர் நடக்கிறது. 

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 21 -ம் தேதி முதல் 25 -ம் தேதி வரை நடக்கிறது. அடுத்ததாக டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 2- வது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 29 -ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 2 -ம் தேதி வரை நடக் கிறது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 -வது டெஸ்ட் போட்டி எட்க்பாஸ்டன் நகரில் ஆகஸ்ட் 10 -ம் தேதி முதல் 14 - ம் தேதி வரை நடக்கிறது. கடைசி மற்றும் 4 -வது டெஸ்ட் கென்னிங் டன் ஓவல் மைதானத்தில் 18 -ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை நடக்கிறது.

சமீபத்தில் இந்திய அணி மே.இ.தீவில் சுற்றுப் பயணம் செய்தது. இதில் இடம் பெறாத 5 இந்திய வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக விமானம் மூலம் லண்டன் கிளம்பிச் சென்றனர். 

துணைக் கேப்டன் கெளதம் காம்பீர், யுவராஜ் சிங், ஜாஹிர்கான், ஸ்ரீ சாந்த் ஆகியோர் காயம் காரணமாக கடந்த சுற்றுப் பயணத்தில் இடம் பெறவில்லை. இவர்களுடன் ரித்திமான் சகாவும் 17 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். 

மேற்படி 5 வீரர்களும் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் மூலம் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனுக்கு கிளம்பிச் சென்றனர். 

தவிர, நட்சத்திர வீரரான டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் இரு வரும் தற்போது இங்கிலாந்தில் உள்ளனர். அவர்கள் அங்கிருந்தவாறு இந்திய அணியுடன் இணைந்து கொள்வார்கள். 

அதிரடி துவக்க வீரரான சேவாக் தோள்பட்டை காயத்திற்காக லண்ட னில் சிகிட்சை எடுத்து வந்தார். மேற்படி இருவரும் மே.இ.தீவு பய ணத்தில் பங்கேற்கவில்லை. 

இந்திய அணி கடைசியாக இங்கிலாந்தில் கடந்த 2008 -ம் ஆண்டு சுற்று ப் பயணம் செய்தது. அப்போது 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் பங்கேற்று தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி : - மகேந்திர சிங் தோனி(கேப்டன்), கெளதம் காம்பீர் (துணைக் கேப்டன்), அபினவ் முகுந்த், ராகுல் டிராவிட், டெண்டுல்க ர், வி.வி.எஸ். லக்ஷ்மண், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாஹிர்கான், ஸ்ரீசாந்த், பிரவீன் குமார், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, முனாப் படேல், ரித்திமான் சகா மற்றும் வீரேந்தர்சேவாக் ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்