முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வீராங்கனை 8 பேருக்கு 2 ஆண்டு தடை?

புதன்கிழமை, 13 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை. 13 - ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய 8 வீராங்கனைகளின் ஒலிம்பிக் கனவு கலைந்தது. அவர்களுக்கு 2 ஆண்டு கால தடை விதிக்கப்பட இருக்கிறது. இது பற்றிய விபரம் வருமாறு - ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ள தடகள வீராங்கனைகளின் எதிர்காலம் கேள்விக் குறி ஆகிறது. அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி உட்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் இவர்கள் பங்கேற்க முடி யாத நிலையும் உருவாகி உள்ளது. 

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனைகள் 8 பேர் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கினார்கள். இவர்கள் டெல்லி காமன்வெல்த் போட்டி மற்றும் சீன, ஆசிய போட்டியில் பதக்கங்களை வென்றவர்கள் என் பதால் விவகாரம் பெரிதானது. 

இவர்கள் மீது இந்திய தடகள சம்மேளனம் அதிரடியான நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் மற்றும் விளையாட்டு அதிகாரிகளும் நீக்கப்பட்டு உள்ளனர். 

இந்த 8 வீராங்கனைகளும் அனபோலிக் என்ற ஊக்க மருந்தை எடுத்து க் கொண்டது முதல் கட்டப் பரிசோதனையில் தெளிவானது. தற்போது 2 -வது கட்ட பரிசோதனையிலும் இவர்கள் ஊக்க மருந்து பயன்படு த்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் அஸ்வினி, பிரியங்கா, ஜூவானா முர்மு, டயானா மேரி தாமஸ், மந்தீப் கவுர், சினிஜோஸ் உள்ளிட்ட 8 வீராங்கனைகளின் விளையாட்டு எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. இவர்களுக்கு 2 ஆண்டு தடை விதிப்பது குறித்தும் இந்திய தடகள சம்மேளனம் ஆலோசித்து வருகிறது. 

இவ்வாறு தடை விதிக்கப்பட்டால் அடுத்த ஆண்டு லண்டனில் நடை பெற உள்ள ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் இவர்கள் பங்கேற்க முடியாத நிலை உருவாகும். 

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது இவர்களது கனவாக இருந்தது. ஆனால் தற்போது இக்கனவு கலைகிறது. 8 வீராங்கனைகளில் இன்னு ம் 3 பேருக்கு மட்டும் இறுதிக் கட்ட பரிசோதனை நடைபெற உள்ளது. 

இதன் முடிவும் விரைவில் தெரிந்து விடும். அதன் பின்னர் தடை குறித் த அறிவிப்பு அதிகாரப் பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது. இந்த விஷயத்தில், வீராங்கனைகள் மீது எந்த கருணையும் காட்டக் கூடாது என்று இந்திய தடகள சம்மேளன இயக்குனர் எம்.எஸ். டோக்ரா கூறியு ள்ளார். 

இது ஒரு புறம் இருக்க பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள தட கள பயிற்சி அகாடமியில் நேற்று முன் தினம் தேசிய ஊக்க மருந்து தடு ப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். பெங்களூரிலும் தடகள பயிற்சி மையத்தில் சோதனை நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்