முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சன் டி.வி. நக்கீரன் மீது நித்தியானந்தா பாய்ச்சல்

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.14 - சட்டவிரோத சமூக விரோத செயல்களிருந்து தப்பிக்க மீடியாவை ஆயுதமாக பயன்படுத்தும் ராட்சதர்கள் தான் சன் டி.வி.மற்றும் நக்கீரன் நாளிதழ் என்று நித்தியானந்தா குற்றம் சாட்டினார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுவாமி நித்தியானந்தர் கூறியதாவது: 18 நாடுகளில் 83 நகரங்களில் என்னுடைய இந்த பேட்டி நேரடியாக ஒளிபரப்பாகிறது. முன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை வாழ்த்த வணங்குகின்றேன்.  அவரது வாழ்க்கை ஆனந்தமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

என்னைப் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படக்காட்சி முழுக்க முழுக்க சித்தரக்கப்பட்டது. 500 புத்தகங்கள் ,8000 மணிநேரம் பிரச்சாரம், 3 பத்திரிக்கைகள், 1 ஸ்பேஸ் சானல் நடத்துகின்ற பத்திரிக்கையாளனகவும் உங்கள் முன் நிற்கின்றேன். தாங்கள் செய்கிற சமூகவிரோத, சட்ட விரோத செயல்களிருந்து தப்பிக்கவும், திசை திருப்பவும் சில ராட்சசர்கள் மீடியாவை  ஆயுதமாக உபயோகிறார்கள்.  சமூக பொறுப்போடு வீடியோ விவகாரத்தை எழுதிய பத்திரிக்கைகள் , சானல்கள் உண்டு. ஆனால் அழிக்க நினைத்த ராட்சதர்கள் சன்டிவி, நக்கீரன் ஆகியோர். பொதுவாக்கை தூய்மைபற்றி அக்கறையே இல்லாதவர்கள். இவர்கள் எத்தனை நாடுகளில் பணத்தை வைத்துள்ளனரோ அத்தனை நாடுகளிலிருந்து பணத்தை கொண்டு வந்து சேவை செய்கிறவன் நான்.  

என்ன வேண்டுமானாலும் எழுதுவதா? நக்கீரன் அவதூறாக எழுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் பெஞ்ச் வரை சென்று தடை வாங்கினோம்.  அதன்பிறகு 13 முறை அவதூறாக எழுதினார்கள்.  கோர்டில் ரகசியமாக  மன்னிப்புக்கேட்டுக்கொண்டே தொடர்ந்து எழுதினார்கள் என்றால் என்ன பத்திரிக்கை தர்மம்.  சமூக பொறுப்புள்ள பத்திரிக்கை தானா என்று மற்றவர்கள் கேள்வி கேட்க வேண்டும்.

நிர்வாணமாக இருப்பது போல் போஸ்டர் ஒட்டுகின்றார்கள், போஸ்டர் ஒட்டுவதற்கும் அளவில்லையா?. நடிகையின் குளியலறை காட்சியை ஒட்டலாம். சாமியார் குளிப்பதுபோல் ஒட்டலாமா?. மீடியாக்களில் இருக்கும் புனித தன்மையை கெடுத்துவிட்டார்கள். நான் சாமியார் இல்லை என்கின்றார்கள். இவர்கள் மீடியா இல்லை என்கின்றேன் நான்.  வீடியோவை  உருவாக்கியதும், பரப்பியதும் கிரிமினல் குற்றம். சன்டிவியினர் கரிப்பு நில அபகரிப்பு மற்றும் பணம் கேட்டு மிரட்டனர்.  அடித்து உதைத்து  பணம் பிடிங்கினர். இதுபற்றி கமிஷ்னரிடம் புகார் கொடுத்துள்ளோம்.  யார் பிடுங்கினார்கள் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று பெயருடன் கொடுத்துள்ளோம்.

முதலில்

ரூ100  கேட்டு  கேட்டு மிரட்டினார்கள. சாமியார் என்பதால்  டிஸ்கவுன்ட் பண்ணி  ரூ.60 கோடி கேட்டார்கள். கொலை மிரட்டல் விடுத்தவர்களின் பெயர்களை புகாரில் தெரிவித்துள்ளேன். இதனால் வரை ஏன் புகார் அளிக்க வரவில்லை என்று கேட்கிறார்கள். ஏர்செல் சிவசங்கரன் கோடிஸ்வரன். அவரே இவர்கள் மிரட்டல் தாங்காமல் நாட்டை விட்டே ஓடிவிட்டார். நான் சன்னியாசி என்னை கொன்றுவிட்டு மக்கள் கொன்றுவிட்டார்கள் என்று தெரிவித்து விடுவார்கள். எல்லா சானல்களுக்கும்  லெனின் கருப்பன் கேசட்டை கொடுத்தார். சன்டிவியை மட்டும் ஏன்  குற்றம் சாட்டுகிறீர்கள் என்கிறார்கள். அவர்கள் மட்டும் தான் எங்களை மிரட்டினார்கள். இதுவரை அவர்கள் பணம் பிடுங்கியது  பற்றி புகார் கொடுத்துள்ளோம். ஆனால் புகார் கொடுத்ததை விட அதிகப் பணம் பிடுங்கப்பட்டுள்ளது. பல பேர் பணம் போனாலும் பரவாயில்லை என்று பயந்து புகார் கொடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் கொடுத்த புகாருக்கும் நடவடிக்கை இல்லை.  இதுவரை 120 தியான மையங்களை கூலிப்படைகளை வைத்து அடித்து நொறுக்கினார்கள். அவைகள் அனைத்தும் சிவாலய மடங்கள் .மதத்தின் மீது தாக்குதல் நடத்துள்ளனர். 17 இடங்களில் எங்கள் சன்னியாசினிகளின் புடவைகளை உருவினார்கள். புடவை உருவுகிற புத்தி  உங்களுக்கு போகவே போகதா, ராட்சதர்கள். 7 இடங்களில் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள் பெங்களூர் ஆசிரமத்துக்குள் சன்டிவி கேமராக்களுடன் புகுந்த ரவுடிக் கும்பல் 3 சன்னியாசிகளை பெட்ரோல் குண்டு வீசி கொழுத்தினார்கள். சாமி எங்கே என்று தேடினார்கள். அனைத்தும் வீடியோ ஆதாரத்துடன் எடுத்து கமிஷனரிடம் கொடுத்துள்ளோம். இந்த தாக்குதல் பற்றி அமெரிக்காவில் உள்ள இந்து பெடரேஷன் என்கிற உலகளாவிய அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனுடைய தலைமை வழக்கறிஞர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். போலீஸ் விசாரணை, குற்றப்பத்திரிக்கை நகல்களை கேட்டுள்ளார். இதுபோன்ற குற்ற செயல்களை ஈடுபடுவோர் பிளாக் லிஸ்டில் வைக்கப்படுவர்.

எனக்கு எதிராக ரஞ்சிதாவை வழிக்கு கொண்டுவர விபச்சார வழக்கு மிரட்டல், பணம் ,எம்.எல்.ஏ. பதவி ஆசை காட்டப்பட்டது.  என்னை பற்றி வீடியோ கேசட் ஒருவேளை உண்மை என்று வைத்துக்கொண்டால் ஒரு ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. என்னை என்துறை சார்ந்த  சன்னியாசிகள் கேள்வி கேட்கலாம். அல்லது பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கலாம். பொதுவாழ்வில் தூய்மை இல்லாத இவர்கள் எப்படி மிரட்டலாம். இவர்கள் மீது புகார் கொடுத்தில் சில விபரங்களை மட்டும் வெளியே சொல்லுங்கள் என்று போலீசார் கூறியுள்ளனர். நாங்கள் குற்றம் சாட்டியுள்ளவர்கள் பெயர்களை கூறினால் சாதிக்பாட்ஷா போல் எத்தனைபேர் சாவான்  என்று எனக்கு தெரியாது.  பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் வழக்கறிஞர்  ஸ்ரீதர் ,நக்கீரன் கோபால் ஆகியோர் நேரடியாக பேசியுள்ளனர். ஐயப்பன் பேசி அடித்துள்ளார்.  பணம் கொடுக்கவில்லை என்றால் வீடியோவை போடுவோம் என்றனர்.  இதுபற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்திக்க புகார் அளிக்க நேரம் கேட்டிருந்தோம். கடைசிவரை அனுமதி கிடைக்கவில்லை.

பிரசன்னா என்பவர் லெனினுடைய வலது கை. நேரடியாக ரூ.35 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தார் என்று புகார் அளித்துள்ளோம்.  நக்கீரன் காமராஜ் மிரட்டியாதகவும் புகார் கொடுத்துள்ளோம். லெனின் கருப்பன் மீது கற்பழிப்பு முயற்சி புகார் அளித்துள்ளனர்.  வீடியோவில் நானும் ரஞ்சிதாவும் இருப்பதுபோல் காட்டப்படும் படுக்கை அறை என்னுடையது அல்ல.  காட்டப்படுகின்ற எந்த நிகழ்வும்  நடைபெறவில்லை.

இந்த புகார் பற்றியெல்லாம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தெரிவிக்க நேரம் கேட்டுள்ளோம். கொடுக்கப்பட்ட புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகின்றேன், காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது.  கூடியவிரைவில் ஊழலுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் . இவ்வாறு சாமி நித்தியானந்தா தனது பேட்டியில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்