முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

லாஸ்ஏஞ்சல்ஸ்,மார்ச்.1 - 83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்தது. இதில் தி கிங்ஸ் ஸ்பீச் ஹாலிவுட் படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், திரைக்கதை என 4 விருதுகள் கிடைத்துள்ளன. 

சிறந்த நடிகராக இப்படத்தில் நடித்த கோலின் ஃபிரித்தும், சிறந்த டைரக்டராக டாம் கூப்பரும், சிறந்த திரைக்கதை ஆசிரியராக டேவிட் சைக்ளரும் விருதுகளை பெற்றனர். சிறந்த நடிகைக்கான விருதை பிளாக்ஸ்வான் என்ற படத்திற்காக நடாலிபோர்ட்மேன் வென்றார். சிறந்த ஒரிஜினல் இசைக்கான போட்டியில் தி சோசியல் நெட்வொர்க் படத்துக்காக டிரண்ட் ரெஸ்னா, அட்டிக்ஸ் ரோஸ் ஆகியோர் பெற்றனர். மற்ற விருது விபரம் வருமாறு:

சிறந்த எடிட்டிங்: ஆங்கஸ்வால்

விஷூவல் எபக்ட்ஸ்: பிராக்லின், கிரீஸ் கார்போர்டு, ஆண்ட்ரி வாக்லே, மற்றும் பீட்டர் பெப். 

சிறந்த ஆவணப் படம்: இன்சைட் ஜாப்

சிறந்த குறும்படம்: தி காட் ஆப் லவ்

சிறந்த பாடல்: ரேண்டிநியூமேன்

சிறந்த துணை நடிகர்: கிறிஸ்டியன் பாலே( தி பைட்டர்)

சிறந்த துணை நடிகை: மெலிசாலியே( தி பைட்டர்)

சிறந்த வெளிநாட்டு படம்: தி பெட்டர் வேர்ல்டு(டென்மார்க்)

சிறந்த அனிமேசன் படம்: டாய் ஸ்டோரி - 3

சிறந்த ஆர்ட் டைரக்சன்: ராபர்ட் ஸ்டார்ம் பெர்க் மற்றும் கரன்வோகாரா ஆகியோர் பெற்றனர். விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மேடையில் தோன்றி பாடினார். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் தம்பதி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஆலிவுட் நடிகர், நடிகைகள், டெக்னீசியன்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்