முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஸ்ட்ராஸ் பேட்டி

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 15 - இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளி லும் வெற்றி பெறுவோம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்ட்ராஸ் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வரு மாறு - மேலும், இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் மிகவும் சவாலாக இருக் கும் என்றும் எனவே இங்கி. வீரர்கள் இதற்காக தீவிரப் பயிற்சி எடுத்து ஆயத்தமாகி வருவதாகவும் அவர் கூறினார். 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. அந்நாட்டு அணி யுடன் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் , 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி - 20 போட்டியில் பங்கேற்கிறது. 

முதலாவது டெஸ்ட்  போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரு ம் 21 -ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில், இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் குறித்து அளித்துள்ள பேட்டியில், இங்கிலாந்து கேப்டன் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் கூறியது வருமாறு - இந்த டெஸ்ட் தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்ப தை ஒப்புக் கொள்கிறோம். 

டெஸ்ட் தரவரிசையில், இந்தியா முதலிடத்தில், இருப்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். அதே நேரத்தில், சொந்த மண்ணில் விளையாடுவது எங்களுக்கு சாதகமான விஷயம். 

இதனால், எந்த அணியையும், தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்திய அணியில் அனுபவமிக்க வீரர்களும், இள ம் வீரர்களும் சம அளவில் இடம் பெற்று உள்ளனர். 

மேலும் கடந்த 2 ஆண்டுகளாக வரிசையாக வெற்றிகளையும் இந்திய அணி பெற்றுள்ளது. இதனால், உற்சாகமான மனநிலையில் இந்திய அணி உள்ளது. இதையெல்லாம் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். 

ஆஸ்திரேலியயாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கு நிகரானதாக இந்த டெஸ்ட் தொடரை கருதுகிறோம். கடந்த 2007 -ம் ஆண்டு இந்தியா வுக்கு எதிரான தொடரை நாங்கள் இழந்தோம். 

இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் நாங்கள் இருக் கிறோம். 4 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற கடுமையாக போ ராடுவோம். அதற்கான நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

கடந்த 2007 -ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்