முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு தொடர்: இலங்கை ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

எடின்பர்க், ஜூலை. 15 - ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் தொ டரில் எடின்பர்க் நகரில் நடைபெற்ற 3 -வது லீக் ஆட்டத்தில் இலங் கை அணி 183 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில், ஜெயவர்த்தனே, கரு ணாரத்னே, ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடி த்து அணி கெளரவமான ஸ்கோரை எட்ட உதவினர். மென்டிஸ், மலி ங்கா, சண்டிமால், மேத்யூஸ் ஆகியோர் அவர்களுக்கு பக்கபலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மலிங்கா புயல் வேகத்தில் பந்து வீசி 5 முக்கிய விக்கெட்டுகளைக் கை ப்பற்றி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பிரசாத், மென்டிஸ் மற்றும் பெரீரா ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசி னர். 

முத்தரப்பு ஒரு நாள் தொடர் போட்டி ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய 3 அணிகள் கோப்பைக்காக போராடி வருகின்றன. 

இந்தத் தொடரின் 3 -வது லீக் ஆட்டம் எடின்பர்க் நகரில் உள்ள கிரேஞ் ச் கிரிக்கெட் கிளப் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் டாசில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

இலங்கை அணி தரப்பில், ஜெயவர்த்தனே மற்றும் கருணாரத்னே இரு வரும் ஆட்டத்தை துவக்கினர். அந்த அணி இறுதியில், 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீர ர்கள் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

துவக்க வீரர் ஜெயவர்த்தனே அதிகபட்சமாக, 64 பந்தில் 64 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் ஹக் வீசிய பந்தில் கொயிட்சரிடம் கேட்ச் கொடுத்து வெளியே றினார். 

அடுத்தபடியாக, கருணாரத்னே 82 பந்தில் 60 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, மென்டிஸ் 26 பந்தில் 34 ரன்னையும், மலிங்கா 15 பந்தில் 32 ரன்னையும், கீப்பர் சண்டிமால் 24 ரன்னையும், மேத்யூஸ் 23 ரன்னையும் எடுத்தனர். 

ஸ்காட்லாந்து அணி தரப்பில், மாம்சென் 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ஹக் 53 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தா ர். தவிர, டிரம்மண்ட், டெவே மற்றும் கெளடி ஆகியோர் தலா 1 விக் கெட் எடுத்தனர். 

ஸ்காட்லாந்து அணி 285 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை இலங்கை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 101 ரன்னில் சுருண்டது. 

இதனால் இலங்கை அணி இந்த 3 -வது லீக் ஆட்டத்தில், 183 ரன் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் முன்னிலை பெற் று உள்ளது. 

ஸ்காட்லாந்து அணி வீரர்களில் ஒருவர் கூட அரை சதத்தை தாண்டவி ல்லை. ஆனால் ஒரு வீரர் கால் சதம் அடித்தார். மற்ற வீரர்கள் குறை ந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். மொத்தத்தில் 3 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க எண்ணைத் தொட்டனர். 

பின்வரிசை வீரரான ஹக் அதிகபட்சமாக, 61 பந்தில் 34 ரன்னை எடுத் தார். டெவே 17 ரன்னையும், கொயிட்சர் 10 ரன்னையும் எடுத்தனர். கேப்டன் டிரம்மண்ட் 5 ரன்னிலும், துவக்க வீரர் வாட்ஸ் 3 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

இலங்கை அணி தரப்பில், மலிங்கா 30 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். பிரசாத் 17 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, பெரீரா மற்றும் மென்டிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்