முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம்-புதுவையில் பிளஸ்​2 தேர்வுகள் இன்று துவக்கம்

புதன்கிழமை, 2 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச், 2 - தமிழகம் மற்றும் புதுவையில் ஏறக்குறைய 8 லட்சம் பேர் எழுதும் பிளஸ் 2 தேர்வுகள் இன்று(மார்ச் 2ம் தேதி) துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுவையில்  பிளஸ்​2 தேர்வு மார்ச் 2​ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28​ந் தேதியும் தொடங்கும் என்று அதிகாரப்nullர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ்​2 தேர்வு இன்று தமிழ் முதல் தாளுடன் தொடங்குகிறது.

பிளஸ்​2 தேர்வை 7 லட்சத்து 80 ஆயிரத்து 631 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 5,477 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 23 ஆயிரம் மாணவ​மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள். மாணவர்களை விட 50 ஆயிரத்து 659 மாணவிகள் அதிகமாக தேர்வு எழுதுகிறார்கள்.

சென்னை மாநகரில் 445 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 49 ஆயிரத்து 8 மாணவ​மாணவிகள் பிளஸ்​2 தேர்வு எழுதுகிறார்கள்.

புதுவையில் 31 தேர்வு மையங்களில் 95 பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 517 பேர் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் 5 ஆயிரத்து 212 பேர் மாணவிகள். 6 ஆயிரத்து 305 பேர் மாணவர்கள். மொத்தத்தில் தமிழகம்  மற்றும் புதுவையில் பிளஸ்​2 தேர்வுக்காக 1,890 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கூட மாணவர்களைத்தவிர தனித்தேர்வர்களாக 57 ஆயிரத்து 86 பேர் எழுதுகிறார்கள்.

தேர்வு தினமும் காலை 10 மணிக்கு துவங்கி பகல் 1.15 மணிக்கு முடிகிறது. இதில் கேள்விகளை படித்துப்பார்க்க வழக்கம்போல 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது.

டிஸ்லெக்சியா, பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள், வாய் பேசாதவர்கள் மற்றும் இதர உடல் ஊனமுற்றோர்கள் சொல்வதை தேர்வில் எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கட்டு உள்ள மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைந்துள்ளதா என்று முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர்  நேரில் ஆய்வு செய்து, பின்னர் அங்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆகியோரால் செய்யப்பட்டுள்ளன. அடிக்கடி ஆய்வு மையங்களை கண்காணிக்க அனைத்து ஆய்வு அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழுவில் போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அதிகாரி, உதவி கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரம் கண்காணிப்பு உறுப்பினர்கள் தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள். பறக்கும் படையினர் தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள். மாணவர்கள் தேர்வில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். துண்டு சீட்டு வைத்திருத்தல், அடுத்த மாணவரை பார்த்து எழுத முயற்சி செய்தல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடத்தல், ஆம் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுதல் ஆகியவை குற்றமாகும். இதில் அதிகபட்ச தண்டனையாக சிறைத்தண்டணை கிடைக்கும். அவர்கள் தேர்வு எழுத முடியாது. கோர்ட்டு வழக்கு முடிந்தபின்னர் தான் அதுபற்றி முடிவு செய்யப்படும். தேர்வை நல்ல முறையில் நடத்திட மாணவர்களும் ஒத்துழைக்கவேண்டும்.

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் 5 லட்சத்து 15 ஆயிரத்து 281 பேர் பயன் அடைந்துள்ளனர்.

பிளஸ்​2 தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:​

மார்ச் 2​ந் தேதி​ தமிழ் முதல் தாள்

3​ந் தேதி​ தமிழ் இரண்டாம் தாள்

7​ந் தேதி​ ஆங்கிலம் முதல் தாள்

8​ந் தேதி​ ஆங்கிலம் இரண்டாம் தாள்

11​ந் தேதி​ இயற்பியல், பொருளாதாரம், உளவியல்

14​ந் தேதி​ வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து

17​ந் தேதி​ கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நிட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்

18​ந் தேதி​ வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

21​ந் தேதி​ உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்

23​ந் தேதி​ தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி பாடம்

25​ந் தேதி​ அனைத்து தொழில்பாட தேர்வுகளும், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28​ந் தேதி துவங்கி ஏப்ரல் 11​ந்தேதி முடிகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 7 லட்சத்து 54 ஆயிரத்து 679 பேர் எழுத உள்ளனர். மேலும் தனித்தேர்வர்களும் ஒரு லட்சம் பேர் எழுதுகிறார்கள். மொத்தத்தில் 8 லட்சத்து 55 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.

மெட்ரிகுலேசன் தேர்வு, ஆங்கிலோ இந்தியன் தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுகளும் மார்ச் 22​ந்தேதி தொடங்கி ஏப்ரல் 11​ந் தேதி முடிகிறது. மெட்ரிகுலேசன் தேர்வை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 252 பேர் எழுதுகிறார்கள்.

இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்திலான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நேற்று நாடு முழுவதிலும் துவங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்