முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்சிங் பயிற்சிக்கு வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு

புதன்கிழமை, 2 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச், 2 -சென்னையில் குத்துச்சண்டை பயிற்சிக்கு வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த குத்துசண்டை சங்க மாநில செயலாளர் கருணாகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது பற்றி விபரம் வருமாறு:-

சென்னை புரசைவாக்கம் தானப்பன் தெருவில் வசிப்பவர் கருணாகரன் (46) ரயில்வே பாக்ஸராகவும், அமெச்சூர் பாக்ஸிங் பயிற்சியாளராகவும் தமிழ்நாடு பாக்ஸிங் சங்க செயலாளராகவும் உள்ளார்.

இவரிடம் பல்வேறு ஆண், பெண் பயிற்சியாளர்கள் குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகின்றனர். இவர் குத்துச்சண்டை மாநிலசங்க செயலாளராகவும் உள்ளதால் இவர் பரிந்துரைத்தால் மட்டுமே தேசிய அளவில் போட்டியில் பங்கு பெற முடியும்.

சென்னை டிரஸ்ட்புரத்தை சேர்ந்தவர் ஏகானந்தம் (48), இவரதுமகள் துளசி (22) பட்டதாரியான இவர் 2002-ம் ஆண்டு முதல் அமெச்சூர் பாக்ஸிங் கிளப்பில் சேர்ந்து குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகிறார். மாநில, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்களை வென்றுள்ளார். இவருக்கும் கருணாகரன் பயிற்சி அளித்துள்ளார்.

இந்நிலையில் பயிற்சிக்கு வா என்று அழைத்து தன்னுடைய ஆசைக்கிணங்கி போகும் படி துளசியிடம் கருணாகரன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதுபற்றி துளசி தனது வழக்கறிஞருடன் போலீஸ் கமிஷனரிடம் இது பற்றி புகாரை அளித்துள்ளார். கடந்த மாதம் அளிக்கப்பட்ட இந்த புகாரினை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கமிஷனர் மாற்றி உத்தரவிட்டதன் பேரில் இது பற்றி விசாரணை நடத்திய போலீசார் நேற்று காலை கருணாகரனை கைது செய்தனர்.

பின்பு அவரை எழும்பூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். கருணாகரன் மீது பிரிவு 354, 506 (2), தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் பிரிவுகள் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இது பற்றி துளசியின் வழக்கறிஞர் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி காலை 10.30 மணி அளவில் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து தேசிய விளையாட்டு போட்டியில் பங்குபெற வேண்டுமானால் தனது ஆசைக்கு இணங்கும் படி கருணாகரன் துளசியிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் பயந்து போன துளசி அவரை தள்ளிவிட்டு ஓடிவந்து விட்டார்.

அதன்பிறகு இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று போனில் துளசியை மிரட்டியுள்ளார். இது பற்றி கமிஷனரிடம் புகார் அளித்தும், கடந்த பிப்.24-ந் தேதி இரவு வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் இன்று கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு அவருடைய வழக்கறிஞர் கூறினார்.

கைசெய்யப்பட்ட கருணாகரன் எழும்பூர் 13-வது எம்.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற ஆணையின் பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் கருணாகரன் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சிலர் அவரை தாக்கினர். அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களிடம் இருந்து கருணாகரனை பாதுகாத்து சிறைக்கு கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட கருணாகரன் தென்கரயில்வேயில் புள்ளியியல் பிரிவில் வேலை செய்து வருகிறார். தென்னக ரயில்வேயின் பாக்ஸசாரக இருந்து வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளன. இவருடைய மனைவி வடசென்னையில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago