முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் தொகையில் தமிழகத்திற்கு 3-வது இடம்

புதன்கிழமை, 20 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 20 -​ மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழகத்தில் 7 கோடி பேர் உள்ளனர். இந்தியாவில் மக்கள் தொகையில் தமிழகம் 3 வது இடம் பெற்றுள்ளது. இந்திய நாட்டின் நகரங்களில் நெரிசலில் மிகுந்த நகரமாக சென்னை 2 வது இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நகர்புற மற்றும் கிராமபுற உத்தேச மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டார். மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் அதை பெற்றுக் கொண்டார். பின்னர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் உத்தேச மக்கள் தொகை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. தற்போது நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் வசிக்கும் மக்கள் தொகை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது.இதில் 1097 நகர்புறங்களிலும் 15 ஆயிரத்து 979 கிராமங்களிலும் கணக்கெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958. இதில் பெண்கள் 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 ஆகும். கிராமப்புறங்களில் 3 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரத்து 229 பேரும், நகர்ப்புறத்தில் 3 கோடியே 49 லட்சத்து 49 ஆயிரத்து 729 பேரும் வசிக்கின்றனர்.மக்கள் தொகையில் தமிழகம் 3​வது இடத்தை பிடித்துள்ளது. மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னை 2​வது இடத்தில் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். நகர்ப் புறங்களில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2001​ல் கணக்கெடுப்பின்படி நகர்ப்புறங்களில் 44 சதவீதம் மக்கள் தொகை இருந்தது. இப்போது 48.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப் புறங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 6.49 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 27 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது. 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் உள்ளனர். கிராமப்புறங்களை பொருத்தமட்டில் 993 பெண்களும் நகரப்பகுதியில் 998 பெண்களும் உள்ளனர். எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை 5 கோடியே 24 லட்சம். இதில் 2 கோடியே 76 லட்சம் பேர் நகர்புறங்களில் உள்ளனர்.இதில் 0.746 கோடியும் கிராமப்புறங்களில் 0.443 கோடியும் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எழுத்தறிவு பெற்றவர்களில் விழுப்புரம் மாவட்ட கிராமப் பகுதி முதல் இடத்தை பிடித்துள்ளது. நகர்புறங்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கையில் சென்னை மாவட்டத்தில் 0.385 கோடி பெற்று முதல் இடத்தில் உள்ளனர். கோவை மாவட்டம் 0.212 கோடி பெற்று 2​வது இடத்தில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம புறங்களில் 90.95 சதவீதம் பேரும், நகர் புறங்களில் 92.40 சதவீதம் பேரும் எழுத்தறிவு பெற்று முதல் இடத்தில் உள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 62.7 சதவீதம் பேரும், நகர பகுதிகளில் 74 சதவீதம் பேரும் எழுத்தறிவு பெற்று மாநிலத்தில் கடைசி இடத்தை பிடித்துள்ளனர். தேசிய அடையாள அட்டைக்கான கணக்கெடுக்கும் பணி புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடங்கி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்