முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூரில் இரும்பு கம்பி கடத்த முயற்சி: 4 பேர் கைது

புதன்கிழமை, 20 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மேலூர்,ஜூலை.20 - மேலூர் நான்கு வழிச்சாலையில் இரும்பு கம்பியை லாரி டிரைவரின் உடந்தையுடன் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் கடந்த சில மாதங்களாக பெண்களை காட்டி லாரி டிரைவரிடம் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை தடுக்க மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டார். அதன்படி திருச்சி சந்திப்பு வரை 3 போலீஸ் பிரிவுகள் போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் நேற்று அதிகாலை மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தும்பப்பட்டி நான்கு வழிச்சாலை அருகே ஒரு லாரியில் இருந்து கம்பியை கீழே இறக்கி மற்றொரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்ட 2 பேர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சேலத்தில் இருந்து மதுரை ரிங் ரோட்டில் கட்டப்படும் கல்லூரி கட்டிட வேலைக்கு இரும்பு கம்பிகளை லாரியில் ஏற்றி கொண்டு வந்ததாக டிரைவர் சித்தேஷ் கூறியுள்ளார். அந்த கம்பிகளை திருடி விற்க சித்தேஷ் மற்றொரு லாரி உரிமையாளரும், டிரைவருமான கவுரிசங்கரை லாரியுடன் வருமாறு போனில் அழைத்துள்ளார். திண்டிவனத்தில் உள்ள பழைய இரும்பு கடையில் 4 லோடுமேன்களை ஏற்றிக் கொண்டு தும்பைப்பட்டிக்கு அவர் வந்துள்ளார். அதிகாலை 3 மணியளவில் ஏற்கனவே தயாராக இருந்த லாரியில் இருந்து இரும்பு கம்பிகளை மாற்றி ஏற்றியுள்ளனர். அப்போதுதான் போலீசாரிடம் பிடிபட்டதாக விசாரணையில் தெரிவித்தனர். 4 பேரையும் கைது செய்த போலீசார் அந்த 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்