முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் அமைச்சர் ஷாபாஜ் சுட்டுக்கொல்லப்பட்டார்

புதன்கிழமை, 2 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,மார்ச்.- 3 - பாகிஸ்தான் நாட்டு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாபாஜ் பாத்தி நேற்று இஸ்லாமாபாத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை தீவிரவாதிகள் செய்திருக்கலாம் என்று தெரிகிறது. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஷாபாஜ் பாத்தி. இவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க பாடுபாட்டு வந்தார். மதவாதம் இவருக்கு பிடிக்காது. அதனால் மதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் இவருக்கு கடந்த ஓராண்டு காலமாகவே கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இந்தநிலையில் இவர் நேற்றுக்காலையில் இவரது வீடு அருகே ஒரு காரில் சென்று கொண்டியிருந்தார். அப்போது அவர் துப்பாக்கியால் சரமாரியாக சுடப்பட்டார். 

இதில் படுகாயம் அடைந்த பாத்தி மரணமடைந்தார். இவரது காரை நோக்கி 4 போர் கொண்ட கும்பல் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர் என்றும் இவர்கள் 4 பேரும் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று தெரிகிறது. பாத்திவுடன் காரில் டிரைவர் மற்றும் ஒரு பெண் ஆகியோர் சென்றனர். ஆனால் பாதுகாவலர்கள் யாரும் உடன் செல்லவில்லை. பாத்தி சென்ற காரை நோக்கி நான்கு திசையில் இருந்தும் 4 பேர் இயந்திர துப்பாக்கியால் சுட்டனர் என்று போலீஸ் துணைபோலீஸ் இன்ஸ்பெக்டர் பின் யாமின் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்மட்ட தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago