முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவோயிஸ்ட்டுகள் பகுதியில் 4 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்

புதன்கிழமை, 2 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ால்கன்கிரி,மார்ச்.- 3 -  ஒரிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் கடத்தி கொண்டு வரப்பட்ட சுமார் 4 ஆயிரம் கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது சர்வதேச சந்தை மதிப்பில் ரூ. 2 கோடி மதிப்பாகும். ஒரிசா மாநிலத்தில் உள்ள மால்கன்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள ஓர்கெல் பகுதியில் சுமார் 4 ஆயிரம் கிலோ கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையொட்டி போலீசார் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 4 ஆயிரம் கிலோ கஞ்சாவை ஆயுதம் தாங்கிய ஒரு கும்பலுடன் கடத்தி வரப்படுவது தெரியவந்தது. அதை உடனே போலீசார் பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக 133 பேர்களையும் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரி அனிருத் ரவுத் கூறுகையில், சொருலுகுன்டா பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. 

உடனே நாங்கள் நேற்று அதிகாலையில் அந்த பகுதிக்கு சென்றோம். அப்போது ஒரு கும்பல் ஆயுதம் தாங்கியவர்களின் பாதுகாப்புடன் கஞ்சாவை கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. உடனே அவர்களை கைது செய்ததோடு கஞ்சாவையும் பறிமுதல் செய்தோம் என்றார். கஞ்சாவின் எடை சுமார் 40 குவிண்டாலாகும். ஒரு குவிண்டால் என்பது 100 கிலோ. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.2 கோடியாகும் என்றும் ரவுத் மேலும் கூறினார். கஞ்சாவை கடத்தியவர்கள் மல்கன்கிரி மாவட்டத்தை சேர்ந்த சித்ரகொண்டா பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் சட்டீஷ்கர் மாநிலத்திற்கு அந்த கஞ்சாவை கடத்தி சென்றனர் என்றும் ரவுத் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago