முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊடகங்களின் இஷ்டத்துக்காக தலைவரை மாற்ற முடியாது: கருணாநிதி

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

கோவை,ஜூலை.- 26 - மத்தியில் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் எனினும் மத்திய அமைச்சரவையில் காலியாக இருக்கும் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 2 இடங்களை கேட்க போவதில்லை என்றும் ஊடகங்களின் இஷ்டத்துக்காக தலைவரை மாற்ற முடியாது என்றும் கருணாநிதி கூறினார். கோவை பொதுக்குழு கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில்,  தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையில் காலியாக இருக்கும் 2 இடங்கள் குறித்து தி.மு.க. வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்.பிக்கள் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டது. காலியாக இருக்கும் அந்த இடங்கள் வெற்றிடமாகவே இருக்கும். அதை நிரப்ப தி.மு.க. முயற்சி செய்யாது. இருப்பினும் தி.மு.க. தொடர்ந்து காங்கிரஸ் அணியில் இருக்கும்.
இந்த முடிவு காங்கிரஸ் மீதான அதிருப்தியில் எடுக்கப்படவில்லை. தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தி.மு.க. மீது வெளிப்படுத்தும் அதிருப்தி குறித்துத்தான் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் எடுத்து சொன்னார்கள். அதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். ஏற்கனவே உள்ள மத்திய அமைச்சர்கள் அப்படியே நீடிப்பார்கள். பொதுக்குழு தீர்மானத்தில் சி.பி.ஐ. அமைப்பை குறை கூறவில்லை. அந்த அமைப்பில் உள்ளவர்கள் சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்றுதான் தீர்மானத்தில் கூறியுள்ளோம்.
ஒவ்வொரு பொதுக்குழு கூடும் போதும் ஊடகங்கள் ஏற்படுத்தும் ஊகங்களுக்காக தலைவரை மாற்ற முடியாது. தி.மு.க. சட்ட திட்டத்துக்கு உட்பட்ட கட்சி. உங்கள் இஷ்டத்துக்கு தலைவரை மாற்ற முடியாது. பேரவை தேர்தல் தோல்விக்கு தி.மு.க. தான் காரணம் என பா.ம.க., கொ.மு.க. ஆகிய கூட்டணி கட்சிகள் கூறியுள்ளனவே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நான்தான் காரணம் என்று பொதுக்குழுவிலேயே கூறி விட்டேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்