முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வியை அமல்படுத்த 5 ஆண்டு கால அவகாசம் தேவை இல. கணேசன் கருத்து

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

மயிலாடுதுறை,ஜூலை.- 26 - சமச்சீர் கல்வியில் தரமான பாடத்திட்டத்தை வகுப்பதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டு கால அவகாசம் தேவை என்று பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது, தி.மு.க ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக மக்கள் தி.மு.க.விற்கு எதிராக வாக்களித்தனர். எனினும் இந்த எதிர்ப்பை முழுமையானதாக கருத முடியாது. 2014 ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் காங்கிரசை தமிழக மக்கள் தோற்கடித்தால்தான் முழு வெற்றியாகும்.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் 2 ஜி அலைக்கற்றை ஊழலுக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும், வரும் 7 ம் தேதி தூத்துக்குடியில் கடல் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago