முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுக மாவட்ட செயலாளர் தளபதி- பொட்டுசுரேஷ் ஜாமீன் மனு டிஸ்மிஸ்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூலை.- 26 - நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திமுக மாவட்ட செயலாளர் தளபதி, பொட்டு சுரேஷ் ஆகியோரது ஜாமீன் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.   திருமங்கலத்தை சேர்ந்த சிவனாண்டி- பாப்பா தம்பதியினர் கொடுத்த புகாரின் பேரில் ஐந்தேகால் ஏக்கர் நிலத்தை மோசடி செய்து அபகரித்ததாக மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி, மு.க.அழகிரின் ஆதரவாளர் பொட்டு சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் பொட்டு சுரேஷ்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தங்களை ஜாமீனில் விடக்கோரி தளபதி, பொட்டு சுரேஷ் உள்ளிட்ட 4 பேரும் மதுரை ஜேஎம் 1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு நேற்று மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.   மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் போலீஸ் காவலுக்கு அனுமதிக்க முடியாது என்ற உத்தரவை எதிர்த்து போலீசார் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று மனுவை டிஸ்மிஸ் செய்து மாஜிஸ்திரேட் முத்துக்குமரன்  உத்தரவிட்டார். ஜாமீன் கிடைத்து விடும் என்று ஆவலுடன் இருந்த திமுகவினருக்கு இந்த உத்தரவி பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்