முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர் சமஉரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு பிரகாஷ்காரத் பங்கேற்கிறார்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை - 28 - சென்னையில் வரும் 30-ந் தேதி சி.பி.எம். கட்சியின் சார்பில் இலங்கை தமிழர் சம உரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பங்கேற்கிறார். இதுகுறித்து கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)​யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் என். சீனிவாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு;
தமிழக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வித்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திட வேண்டுமென்றும், சமச்சீர் கல்வியின் ஒரு அம்சமான பொதுப்பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே செயல்படுத்திட வேண்டுமென்றும் அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்கிட வேண்டுமென்றும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தினை செயல்படுத்தும் வகையில் வழிகாட்டுதல் நெறிமுறைகளை உடனடியாக உருவாக்கிட வேண்டுமென்றும் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் தாராளமயக் பொருளாதாரக் கொள்கையினால் வறுமை, வேலையின்மை அதிகரித்துள்ளது, உணவுப்பொருட்கள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வருகின்றன. விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஏழை​எளிய உழைப்பாளி மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் சரிந்து வருகிறது. அதே சமயம் சட்ட விரோதமாக பொதுச்சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன, உயர்மட்டத்தில் நடந்துள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், முதல் சட்டவிரோத கனிம சுரங்கத்தொழில் மற்றும் இரும்புத்தாது ஏற்றுமதி ஊழல் வரை வரலாறு காணாத ஊழல்கள் வெளிப்பட்டுள்ளன.
இத்தகைய ஊழலை எதிர்த்தும், ஊழல் செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்திட
லோக்பால் மசோதாவை(பிரதமரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டுவரும் வகையில்)
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுவது , தேசிய நீnullதித்துறை கமிஷன் அமைப்பது, தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வருவது, பொதுச்சொத்துக்கள் சூறையாடப்படுவதை தடுப்பது, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப்பணத்தை கைப்பற்றுவது ஆகியவற்றை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் ஜூலை 15 முதல் 21 வரை ஒருவார காலம் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை நடத்தியுள்ளன. தமிழகத்தில் நுற்றுக்கணக்கான மையங்களில் தர்ணா​ஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சார இயக்கங்கள் நடத்தப்பட்டன. அனைத்து மட்ட ஊழலை ஒழித்திடவும், அரசியலில் நேர்மையை வலியுறுத்தியும், இதற்கு ஆதரவாக மக்களை அணி திரட்டிடவும் தமிழகத்தில் மேற்கண்ட இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
நிலமோசடியைத் தடுத்திடுக :
தமிழகத்தில் நிலப் பறிப்பு, நில மோசடி குறித்து 2000-க்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறைக்கு
வந்துள்ளதாகத் தெரிகிறது. முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டு பலர் மீது புகார்கள் உள்ளன. இதற்கு முன்னரும் பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன. எனவே, நிலப்பறிப்பு மற்றும் மோசடி செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலம் மீண்டும் கிடைப்பதை உறுதிப்படுத்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான ஆயுத மோதல்கள் முடிவுற்று, இரண்டு ஆண்டுகளாகியும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு சம உரிமை, அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அரசும், ராஜிய உறவுகளை பயன்படுத்தி இலங்கை அரசை வலியுறுத்துவதில்லை. எனவே, இலங்கை தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை உள்ளிட்ட அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சி அளித்திடும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வு காண வலியுறுத்தியும், இன்னும் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்திடக்கோரியும், ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில்
நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் மீது சுயேச்சையான, நேர்மையான விசாரணை நடத்திட
வலியுறுத்தியும் இலங்கைத் தமிழர் சமஉரிமை​அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு நடத்துவதென்று
மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.
2011, ஜூலை 30 பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷணன் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் அகில இந்திய
பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், இலங்கை தமிழ்க் குடியரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தம்
உள்ளிட்டு பல தலைவர்களை பங்கேற்கச் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் ​ நடவடிக்கை எடுத்திடுக :
மதுரை மாவட்டம், பொதும்பு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி
மாணவிகளை, பள்ளியின் தலைமையாசிரியர் தொடர்ச்சியாகப் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என்ற செய்தி வன்மையான கண்டனத்திற்குரியது. மாணவிகளுக்கு நேர்ந்துள்ள கொடுமை அவர்களது கல்வி தொடர்வதிலேயே கூட தடைகளை ஏற்படுத்தும். மிகுந்த மனஉளைச்சலையும், nullநீண்ட கால தாக்கத்தையும் உருவாக்கும். எனவே, இந்த கொடூரமான குற்றத்தை இழைத்த தலைமை ஆசிரியரை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சட்டப்படி குழந்தைகளையும், பெற்றோர்களையும அவர்கள்
குடியிருக்கும் இடத்திலேயே விசாரிப்பதுடன் தகுந்த பாதுகாப்பும் அளித்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மேலும்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட உண்மையறியும்
குழுவினரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகளும், பெற்றோரும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களைக் கூறியுள்ளனர். எனவே, அந்தப்பள்ளியில் பல குழந்தைகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாலியல் ரீதியான குற்றங்களை காவல்துறை ஒரு குழு அமைத்து விசாரித்து, வழக்கு விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட வேண்டுமென்றும், பொதுவாக பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இத்தகைய பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதைத் தடுப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்