முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாக். இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

ஐ.நா.ஜூலை.- 31 - இந்தியா-பாகிஸ்தான் இடையே புதுடெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் வரவேற்றுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று இருநாடுகள் சார்பாகவும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்தமாதிரி பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடந்தற்கு பான் கீன் மூன் வரவேற்றுள்ளார். இருநாடுகளிடையே உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும். அப்படி தீர்வுகண்டால் இருநாடுகளின் மக்களுக்கு மட்டுமல்லாது அந்த பிராந்தியத்திற்கே நல்லது என்று பான் கீ மூன் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 27-ம் தேதி அன்று புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் ஹினாவும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது எல்லை கட்டுப்பாடு கோடு நெடுகிலும் வர்த்தகம் மற்றும் மக்கள் போக்குவரத்தை அதிகரிப்பதோடு இருநாடுகளிடையே நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்