முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட்டியில்லா பயிர் கடன் வழங்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக்.5 -  தமிழக விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்க ரூ.3000 கோடியும், உரமானியதிற்கு ரூ.89 கோடியும் நிதி ஒதுக்கி தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. நேற்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.அதில் விவசாயிகளுக்கு சில சலுகைகளை அறிவித்தார்.

இது குறித்த விபரம் வருமாறு

 பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில், முதன்மைத் துறையின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  2007​2008, 2008​2009 ஆகிய  ஆண்டுகளில் இத்துறையின் வளர்ச்சி எதிர்மறையாகி, 2009​2010,  2010​2011 ஆகிய ஆண்டுகளில் வளர்ச்சி சதவீதம் சிறிதளவு உயர்ந்த போதிலும், திட்டக் காலத்தின் முதல் நான்கு ஆண்டுகளில் இத்துறையின் மொத்த வளர்ச்சி ஒட்டுமொத்தமாக 0.51 விழுக்காடு எதிர்மறையாகவே இருந்துள்ளது.  நகரமயமாக்கலின் விளைவாக விவசாய சாகுபடி நிலங்கள் குறைந்து வருகின்றன.  பயிரிடு திறன், பாசனத் திறன் போன்றவற்றில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை.  மோசமான இச்சூழ்நிலையை மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இவ்வரசு மேற்கொள்ளும்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்  தலைமையிலான இந்த அரசால், காவிரி வடிநிலப் பகுதி விவசாயிகள், சாகுபடியை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்காக உரிய நாளிற்கு முன்னதாகவே மேட்டூர் அணையிலிருந்து பாசனnull நீர் திறந்துவிடப்பட்டது.  மாநிலத்தில் உள்ள   பிற முக்கிய அணைகளிலும் போதிய nullநீர் இருப்பு இருந்த காரணத்தினால், பாசனத்திற்கான நீnullர் திறந்துவிடப்பட்டது.  கடந்த ஆண்டு 85.35 இலட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி அடைந்துள்ள நிலையில் 2011-​2012 ஆம் ஆண்டில் 115 லட்சம் மெட்ரிக் டன் என்ற உயர் இலக்கினை இந்த அரசு நிர்ணயித்துள்ளது.  உரிய காலத்தில் அணைகளிலிருந்து பாசனnullநீர் திறந்துவிடப்பட்டதாலும், வழக்கமான மழையளவு கணிக்கப்பட்டுள்ளதாலும் இந்த உயர் இலக்கினை அடைய முடியும் என நம்புகிறேன்.

முதன்மைத் துறையினைப் புத்துயிரூட்ட எடுக்கப்படவுள்ள உத்திகளைப் பற்றி நான் இப்போது குறிப்பிட விரும்புகிறேன்.  வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்தையும், உற்பத்தித் திறனையும் அதிகரிக்க இந்த அரசு உரிய கவனம் செலுத்தும்.  தற்போது வேளாண்மைத் துறையில் உற்பத்தியிலும் உற்பத்தி திறனிலும், ஒரு தேக்கநிலை நிலவுகிறது.  உற்பத்தித் திறனில் உள்ள இடைவெளியை சீர் செய்தும், மதிப்புக் கூட்டியும், வேளாண்மை உற்பத்தியை அதிகரித்து இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திட உறுதி கொண்டுள்ளோம்.  மேலும், விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை வரும் ஐந்தாண்டுகளில் இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்த்தும் உயரிய குறிக்கோளை நிர்ணயித்து அதற்கேற்ப செயல்பட உள்ளோம்.  நவீன தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்து, விவசாயிகளிடம் கொண்டு செல்வதன் மூலம் பயிர்களின் உற்பத்தித் திறனை உயர்த்தியும், பண்ணை அளவில் கலப்புப் பண்ணையம் போன்ற உத்திகளை மேற்கொண்டும், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தும் செயல்படுத்துவதன் வாயிலாக ஒருங்கிணைந்த பண்ணை வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

5.சிறந்த தொழில்நுட்ப உத்திகளை ஒருங்கிணைந்த  முறையில் கடைப்பிடிக்க, நடைமுறையில் உள்ள தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், விரைவுபடுத்தப்பட்ட பயறு வகை உற்பத்தித் திட்டம்,  nullர்வள நிலவளத் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர் பாசனத்திற்கான தேசிய இயக்கம் ஆகியவை பண்ணை அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.  தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ்  20102011 ஆம் ஆண்டு, 197 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்கு இந்நிதியாண்டில் 467 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  அதுபோலவே 20102011 ஆம் ஆண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 91.18 கோடி ரூபாய்,  20112012 ஆம் ஆண்டில் 145 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.

நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற முக்கிய பயிர்களின் உற்பத்தித் திறனைப் பெருக்கவும், காய்கறிகள், nullக்கள், பழங்கள் போன்ற அதிக வருவாய் ஈட்டுகின்ற தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடும் பரப்பை விரிவுபடுத்தவும் இந்த அரசு கவனம் செலுத்தும்.  முன்னோடி தொழில்நுட்பங்களான திருந்திய நெல் சாகுபடித் திட்டம், நவீன முறையில் கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தும் திட்டம், துல்லிய பண்ணையம், பி.டி. பருத்தியைப் பரவலாக்குதல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் உகந்த பயிர் மேலாண்மையைக் கடைப்பிடித்தல், பசுமைக் குடில், துல்லிய பண்ணையம் முறைகளில் காய்கறிகளைப் பயிரிடுதல், தோட்டக்கலைப் பயிர்களுக்கான அடர் நடவு முறை போன்றவை தீவிரமாக பரவலாக்கப்படும்.  நெல் உற்பத்தித் திறனை உயர்த்த 2011-​2012 ஆம் ஆண்டில் 22.24 இலட்சம் ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி  மேற்கொள்ளப்படும்.  இதே போன்று 14,000 ஏக்கரில் நவீன முறையில் கரும்பு உற்பத்தித் திறன் உயர்த்தும் திட்டம் மேற்கொள்ளப்படும்.  கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்துவதற்காக, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 2.45 இலட்சம் ஏக்கரில் இத்திட்டத்தை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.  பயறு வகைகளை இறவையில் அதிகப் பரப்பில் தனிப் பயிராக சிறந்த பயிர் மேலாண்மையுடன் சாகுபடி மேற்கொள்வதன் மூலம், அதன் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும்.  பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தித் திறனை உயர்த்திடும் வகையில் 20.93 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 22,000 ஏக்கர் பரப்பில் துல்லிய பண்ணையமும், நான்கு இலட்சம் சதுர மீட்டர் பரப்பில் பசுமைக் குடில் முறையும் மேற்கொள்ளப்படும்.

தரமான விதை, உரம், குறைந்த வட்டியிலான கடன் போன்றவை உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கப் பெறுவது அவசியமாகும்.  விரிவான விதைத் திட்டம் ஒன்றை இந்த அரசு தயாரித்து விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும்.  2011​-2012 ஆம் ஆண்டில் விதை மானியத்திற்காக மட்டும் 85.92 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கியுள்ளது.  இதே போன்று போதுமான உரங்கள் கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலமாக வழங்கப்படும்.  உரம், nullச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மதிப்புக் கூட்டு வரியிலிருந்து இவ்வரசு விலக்களித்துள்ளதால் இப்பொருட்கள் விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும்.  மேலும், விவசாயிகளுக்கு தடையில்லாமல் உரம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு வழங்கப்படும் வட்டியில்லா முன்பணத்தின் தற்போதைய அளவு 90 கோடி ரூபாயிலிருந்து 150 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.  விவசாயிகளுக்கான கடன் வழங்குதல் மற்றும் இதர சேவைகளை மேம்படுத்திட கூட்டுறவுச் சங்கங்கள் வலுப்படுத்தப்படும்.  கூட்டுறவுத் துறை வாயிலாக, 2011​-2012 ஆம் ஆண்டில், உரிய காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்துவோருக்கு வட்டியில்லாப் பயிர்க்கடனாக 3,000 கோடி ரூபாயினை வழங்கும் உயர் இலக்கினை இவ்வரசு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்