முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் பயங்கரவாத டாப் 10ல் மும்பை தாக்குதல்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஆக.6 - உலகில் நடந்த முக்கியமான 10 தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டது. இந்த பட்டியலில் மும்பையில் கடந்த 2008 ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலும் இடம் பெற்றுள்ளது. இதில் 166 பேர் பலியாயினர். இதில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கசாப் என்பவன் மட்டும் பிடிபட்டான். 

இந்த நிலையில் இந்த தாக்குதல், உலகின் 10 முக்கிய தீவிரவாத தாக்குதல் அடங்கிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது தீவிரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளை அதிநவீனமாக மாற்றி அமைத்துள்ளனர். தாக்குதல் தொடங்கிய பின்னர் எதிர்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் வீணாகும் வகையில் அவர்கள் செயல்படுகிறார்கள். எனவே முன்னெச்சரிக்கையும் ஒருங்கிணைப்பு செயல்பாடும் பாதுகாப்பு அதிகரிக்கிறது என பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பென்டகனின் இந்த பட்டியலில் 1995 ல் நடந்த டோக்கியோ சுரங்கப் பாதை தாக்குதல், 2001 ல் ஆந்திராக்ஸ் தாக்குதல், 2007 ல் ஈராக்கில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் மற்றும் அதே ஆண்டில் நடந்த போர்ட்டிக்ஸ் தாக்குதல் ஆகியவை இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கியமான தாக்குதல்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்