முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசியல் கருத்தொற்றுமை தேவை

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.6 - விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசியல் கருத்தொற்றுமை தேவை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது பேசிய அவர், உணவு பணவீக்கத்தை 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் குறித்து மக்களவையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இதில் கருத்து வேறுபாடு எழுந்ததால் அவைத் தலைவர் மீராகுமார் வாக்கெடுப்பு நடத்தினார். இதில் 371 பேர் கலந்து கொண்டனர். தீர்மானத்துக்கு எதிராக 320 பேரும், ஆதரவாக 51 பேரும் வாக்களித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் சிகிச்சை பெறுகிறார். அவரும், அவரது மகன் ராகுலும் அவைக்கு வரவில்லை. 

முன்னதாக விலைவாசி உயர்வு குறித்த விவாதத்துக்கு அரசு சார்பில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் அளித்தார். அவரது பதில் திருப்திகரமாக இல்லை என்று சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகள், பிஜூ ஜனதா தளம், தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்