முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் தேர்வு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

பாங்காக், ஆக.6 - தாய்லாந்து பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தாய்லாந்து நாட்டின் முதலாவது பெண் பிரதமராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஈங்லக் ஷினவத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். தாய்லாந்து நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி தோல்வியைச் சந்தித்தது. எதிர்க்கட்சியான தாய் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றது. புதிய பிரதமராக யாரை  தேர்வு செய்வது என்பது குறித்து தாய்லாந்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 296 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்ற பியூயா தாய் கட்சியின் தலைவர் ஈங்லக் ஷினவத்ரா வெற்றிபெற்றார். இந்த தகவலை பாராளுமன்ற சபாநாயகர் சோமாசக் கியாட்சுராமோத் தெரிவித்தார். இந்த பிரதமர் தேர்வு பற்றிய முடிவு தாய்லாந்து மன்னருக்கு அனுப்பி வைக்கப்படும். அவரது ஒப்புதலைப் பெற்றபிறகு ஈங்லக்  தாய்லாந்து நாட்டின் முதலாவது பெண் பிரதமராகவும், நாட்டின் 28 வது பிரதமராகவும் விரைவில் பொறுப்பேற்பார். பிரதமர் பதவிக்கு ஈங்லக் மட்டுமே போட்டியிட்டார். எதிர்க்கட்சியின் சார்பில் எந்த பிரதமர் வேட்பாளரும் நிறுத்தப்படவில்லை. மேலும் வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபைக்கு வரவில்லை.  

கடந்த ஜூலை 3 ம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பியூயா தாய் கட்சி 5 ல் 3 பங்கு மெஜாரிட்டியை பெற்றது. ஆளும் ஜனநாயகக் கட்சி படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்