முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதி இளவரசரை கொலை செய்ய முயற்சியா?

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

சவுதி,ஆகஸ்ட்-7 - சவூதி இளவரசர் அப்துல் அஜிஸ் அரண்மனையை நோக்கி சுட்டவர் பாதுகாவலர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இளவரசர் அப்துல் அஜீஸை சுட்டுக்கொலை செய்யும் நோக்கில் அவர், அரண்மனையை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

அரபு நாடுகளில் செல்வாக்கு உள்ள நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்றாகும். இந்த நாட்டு இளவரசர் அப்துல் அஜீஸ்ஸின் அரண்மனை தலைநகர் ஜெட்டாவில் இருக்கிறது. இவர் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு இரண்டு பேர் அரண்மனையை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். உடனே அரண்மனை பாதுகாவலர்கள் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதல் நடந்ததை பார்க்கும்போது இது தனிப்பட்ட முறையில் நடந்ததாகத்தான் இருக்கும். அல்கொய்தா தீவிரவாத இயக்கத்திற்கும் இதற்கும் தொடர்பு இருப்பது மாதிரி தெரியவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போதைப்பொருள் அருந்திவிட்டு அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அந்த இரண்டு பேர்களில் ஒருவரிடத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கிதான் இருந்தது. அவர்கள் சுட்டதில் பாதுகாவலர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயத்தில் சவூதி இளவரசர் மீது தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்