முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனாமி புனரமைப்பு முறைகேடு: அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஆக.7 - சுனாமி புனரமைப்பு முறைகேடு தொடர்பாக நடைபெறும் சி.பி.ஜ. விசாரணை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உயர்கல்விக்கான சென்டாக் மாணவர் சேர்க்கையில் பெரிய அளவில் முறைகேடு கள் நடந்துள்ளன. இது தொடர்பாக சி.பி.ஜ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். சுனாமி புனரமைப்பு பணியில் முறைகேடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக சி.பி.ஜ. விசாரணை நடந்து வருகிறது. 

இந்த விசாரணை குறித்து அரசு தெளிவு படுத்த வேண்டும். புதுவையில் உள்ள அரசு அதிகாரிகள் சட்டவிதிகளுக்கு உட்படாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் ஆட்சியாளர்களின் கைப்பாவையாகவும் அவர்கள் செயல்படுகிறார்கள். 

சுனாமி வீடுகள் கட்டுவதற்கான டெண்டர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் முறையாக கோரப்பட்டது. 2008-ம் ஆண்டு செப்டம்பர் வரை ரங்கசாமி தலைமையிலான ஆட்சியே இருந்தது. இடைப்பட்ட காலத்தில் நடந்த சுனாமி புனரமைப்பு பணிகள் குறித்து சி.பி.ஜ. முழுமையாக விசாரணை செய்ய வேண்டும். 

2009-ம் ஆண்டு நகரை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் பேனர்கள் வைக்க கூடாது என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் நகரம் முழுவதும் பேனர்கள் உள்ளன. அரசின் சட்டங்களை முதலில் ஆட்சியாளர்கள் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் இருந்து புதுவைக்கு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது என பலமுறை நாங்கள் கூறியிருந்தோம்.

தற்போது நூற்றுக்கணக்கான டன் ரேசன் அரிசி பிடிபட்டுள்ளது. இந்த அரசு அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக உள்ளதுடன் அதனை ஊக்குவிக்கவும் செய்கிறது. 

சட்டமன்றத்தை காலத்துடன் கூட்ட வேண்டும். அப்போது தான் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் முறையாக கடமையாற்ற முடியும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு புதுவையில் உள்ளதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்