முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

`செல்' நிறுவனம் - தொலைதொடர்பு ஆணையத்துக்கு நோட்டீஸ்

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.7- வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் புகார்மீது உரிய நடவடிக்கை எடுக்காத தனியார் செல்போன் நிறுவனம் மற்றும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பு சென்னை ஜகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் வி.எஸ்.சுரேஷ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஏர்செல் சிம்கார்டு (நம்பரை ஆறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். ஒன்று ஏர்டெல் நிறுவனம் அனுப்பியது.

இதையடுத்து வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு இதுபோன்ற எஸ்.எம்.எஸ். எனக்கு அனுப்ப வேண்டாம் என்று கூறினேன். இதன் பின்னர் முன்பைவிட அதிக அளவில் ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் வந்தன.

இதையடுத்து ஏர்டெல் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் செய்தேன். அதன் பின்னர் பல எஸ்.எம்.எஸ். வந்தன. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் 2010 செப்.22-ம் தேதி புகார் செய்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இதையடுத்து கோர்ட் உத்தரவுப்படி என் புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் 2011 ஜனவரி 10-ம் தேதி ஏர்டெல் தலைமை செயல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்து என்னிடம் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர், விசாரணைக்காக என்னுடைய செல்போனை வாங்கிக்கொண்டனர். இதுவரை அந்த செல்போனை தரவில்லை. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் தனியாக மனு தாக்கல் செய்துள்ளேன்.

மேலும் எனக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய ஏர்டெல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தகவல் தொடர்புத்துறை செயலாளர் ஆகியோருக்கு புகார் செய்துள்ளேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே என் புகார் குறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து தகுந்த உத்தரவை இந்த கோர்ட் பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பால்வசந்தகுமார் மனு குறித்து பதிலளிக்க  தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் மற்றும் தகவல் தொடர்புத்துறை செயலாளர், ஏர்டெல், தலைமை செயல் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்