முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், ஆக.8 - திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின்பட்டியில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியை ஆட்டோவில் கடத்திவந்து கொலைசெய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.மதுரை சோலைஅழகுபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் வெற்றிவேல் (26) இவர் பிரபல ரவுடி. இவர்மீது ஜெய்ஹிந்த்புரம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் ஆட்டோ ஒன்றில் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று வெற்றிவேலை கடத்தி வந்தது. திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின்பட்டி பகுதியில் உள்ள தென்பழஞ்சி கரடிக்கல் செல்லும் ரோட்டில் ஆட்டோவை நிறுத்தி ஆட்டோவில் இருந்த வெற்றிவேலை கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்து உடலை அப்பகுதியில் வீசிவிட்டு சென்றது. பின்னர் சிறிது தூரத்தில் அவர்கள் மது அருந்திக்கொண்டு இருந்தனர். அவர்கள் உடலில் ரத்தக்கறை இருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி தோட்டக்காரர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை  பார்த்த அந்த கும்பல் தப்பியோடியது. அந்த கும்பலைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த் ஆட்டோவை எடுக்க முயலும்போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டான். அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். கொலைசெய்யப்பட்ட வெற்றிவேல் பிரபல ரவுடி என்பதும் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடிக் கும்பலுக்கும் முன்விரோதம் இருந்ததா? அல்லது பெண் விவகாரம் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீஸ் எஸ்.பி. அஸ்ராகார்க் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago