முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவ பிரதிநிதிகளுக்கு அங்கீகாரம்: முதல்வருக்கு பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.8 - கடலுக்கு மீன்பிடித்து செல்ல தடை செய்யப்பட்ட காலத்தில் நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய மீனவர் நல சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கு.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழகத்தில் கடந்த 63 ஆண்டு கால ஆட்சி அதிகார வரலாற்றில் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவராலும், எந்த ஒரு தமிழக முதலமைச்சராலும் இதுவரை வழங்கப்படாத அரசியல் அங்கீகாரத்தை மீனவ சமுதாய மக்களுக்கு வழங்கிய ஒப்பற்ற ஒரே தலைவி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய மீனவர் நலசங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய ஏழை, எளிய, உழைக்கும் மக்களின் வாழ்வு மலர, தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல தொலைநோக்கு திட்டங்களையும், சலுகைகளையும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் முதல் பட்ஜெட்டிலேயே செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த சட்டமன்ற தேர்தலில் 4 மீனவ பிரதிநிதிகளுக்கு போட்டியிட வாய்ப்பளித்தனர். அதில் 3 பேர் வெற்றி பெற்றனர். சட்டப்பேரவை வரலாற்றில், முதன் முறையாக மீனவ சமுதாயத்தை சேர்ந்த டி.ஜெயக்குமார் சட்டப்பேரவை தலைவராகவும், ஏ.கே.ஜெயபாலை மீன்வளத்துறை அமைச்சராகவும் நியமித்து, இதுநாள் வரை எந்த அரசியல் கட்சி தலைவராலும் வழங்கப்படாத அங்கீகாரத்தை மீனவ சமுதாயத்திற்கு அளித்துள்ளார்.

மீன்பிடி தடைக்காலமான மீன் இனப் பெருக்கக் காலத்தில் 45 நாட்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாததை கருத்தில் கொண்டு தமிழக மீனவர்களுக்கு 2000 ரூபாயை தடைக்கால நிவாரணமாக வழங்கியும், புயல் மழைக்காலமான அக்டோபர், தவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாமல் வறுமையில் வாடும் ஏழை மீனவர்களின் நலனுக்காக, தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1200 ரூபாயுடன் சேர்த்து 4000-ம் ரூபாயாக வழங்கப்படும் என அறிவித்த தேர்தல் வாக்குறுதியை முதல் பட்ஜெட்டிலேயே நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு மீனவ மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்