முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது டெஸ்ட் இன்று பிர்மிங்ஹாமில் துவக்கம்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பிர்மிங்ஹாம், ஆக. 10 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாம் நகரில் இன்று துவங்க இரு க்கிறது. சேவாக் வருகையால் இந்திய அணி எழுச்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று ப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே முடிந்த 2 டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2 -0 என்ற கணக் கில் முன்னிலையில் உள்ளது. 

முன்னதாக லார்ட்சில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 196 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்பு நாட்டிங்ஹாமில் நடந்த 2 - வது டெஸ்டில், 319 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து அணியின் இந்தத் தொடர் வெற்றியால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த 3 -வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இந்த 3 -வது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தி ல், தொடரையும் இழக்கும். தவிர, இந்திய அணி நம்பர் - 1 இடத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படு ம். எனவே இந்திய வீரர்கள் ஒருங்கி ணைந்து ஆடி வெற்றி பெற்றுத் தர வேண்டும். 

கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் சரி யான துவக்கத்தை அளிக்கவில்லை. தவிர, மற்ற வீரர்களும் தங்களது திறமைக்கு ஏற்றவைகையில் ஆடவில்லை. 

காயம் காரணமாக கடந்த 2 டெஸ்டில் ஆடாத சேவாக் தற்போது உட ற் தகுதி பெற்று விட்டார். எனவே அவர் 3 -வது டெஸ்டில் பங்கேற்கிறார். அதே போல அவரது பார்ட்னரான காம்பீரும் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டார். இருவரும் துவக்க வீரர்களாக இறங்குகிறார் கள். 

இந்திய அணியின் மூத்த வீரரான டிராவிட் மட்டும் இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வருகிறார். அவரை நம்பித் தான் இந்திய அணி உள்ள து. அவர் 2 டெஸ்டிலும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் இந்தத் தொடரில் தனது திறமைக்கு ஏற்ப சிறப்பாக ஆடவில்லை. 2 -வது டெ ஸ்டின் 2-வது இன்னிங்சில் மட்டும் அவர் அரை சதம் அடித்தார். 

தவிர, லக்ஷ்மண் மற்றும் ரெய்னா இருவரும் சுமாராகவே ஆடி வருகி ன்றனர். அவர்களது ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை. கேப்டன் தோ னி இந்தத் தொடரில் மோசமாக ஆடி வருகிறார். அவரும் தனது திற னை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

ஜாஹிர்கான், யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் காயத் தால் அடுத்த டெஸ்டுகளில் இடம் பெறவில்லை. மோசமாக பந்து வீசி வந்த ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக அமித் மிஸ்ரா களம் இறக்க ப்படலாம். 

ஜாஹிர்கானிற்குப் பதிலாக ஆர்.பி.சிங் அணியில் சேர்க்கப்பட்டு இரு க்கிறார். எனவே அவருக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பு அளிக்கப்படும். பிரவீன் குமார் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருடன் சிங் பந்து வீசு வார். 

இங்கிலாந்து அணியில் இயான் பெல், பிரையர், பீட்டர்சன், கேப்டன் ஸ்ட்ராஸ் மற்றும் மார்கன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். டிரா  ட் காயம் அடைந்துள்ளதால் அவருக்குப் பதில் ரவி பொபாரா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்து அணியின் பெளலிங்கும் சிறப்பாக உள்ளது. ஆண்டர்ச ன், ஸ்டூவர்ட் பிராட், பிரெஸ்னன் ஆகியோர் முத்திரை பதித்து வருகி ன்றனர். டிரம்லட் உடல் தகுதி பெறாததால் பிரஸ்னனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கலாம். 

இங்கிலாந்து அணி இந்த டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப் பற்றி விடும் நிலை உள்ளது. எனவே இந்திய அணி வீரர்கள் முழுக் கவ னத்துடன் விளையாடி இதில் வெற்றி பெற பாடுபட வேண்டும். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த 3-வ து டெஸ்ட் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago