முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சதுரங்க சாம்பியன்ஷிப் மாஸ்கோவில் நடக்கிறது

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஆக. 11 - உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு மே மாதம் ரஷ் யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடக்கிறது. இதை நடத்தும் வா ய்ப்பை சென்னை இழந்து விட்டது. இது பற்றிய விபரம் வருமாறு - 

உலக செஸ் போட்டியை நடத்தும் வாய்ப்பை மாஸ்கோ தட்டிச் சென்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்துக்கும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த போரிஸ் ஜெல்பாண்ட் என்ற வீரருக்கும் இடையே அடுத்த ஆண்டு மே மாதம் உலக சாம்பியன் பட்டத்திற்காக செஸ் போட்டிகள் நடக்க இருக்கின்றன. 

இந்த போட்டியை நடத்தும் வாய்ப்புசென்னைக்கு கிடைக்க இருந்தது. இது தொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதா அனைத்து ஏற்பாடுக ளும் செய்து கொடுக்கப்படும் என்று அறிவித்தார். 

அத்துடன் ரூ. 20 கோடி ஒதுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அதே நேரத்தில் இந்த போட்டியை நடத்த ரஷ்யாவும் ஆர்வம் காட்டியது. அதன் தலைநகர் மாஸ்கோவில் நடத்த முயற்சிகளை மேற்கொண்டது. 

அந்த நாடு 25 லட்சத்து 50 ஆயிரம் டாலரை கொடுக்க முன்வந்தது. இது தமிழக அரசு உறுதி அளித்த தொகையை விட 4 லட்சம் டாலர் கூடுதல் ஆகும். ஆகவே இந்த போட்டியை நடத்தும் பொறுப்பு மாஸ்கோவுக்கு மாறியுள்ளது. 

இதன் மூலம் உலக சாம்பின் பட்டப் போட்டியை சொந்த மண்ணில் விளையாடும் வாய்ப்பை விஸ்வதான் ஆனந்த் இழந்துள்ளார். மேலு ம், இன்னொரு விதியும் மாஸ்கோவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 

போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் மண்ணில் ஆட்டம் நடக்க கூடாது என்ற விதி உள்ளது. அந்த வகையிலும், மாஸ்கோவுக்கு கூடுத ல் வாய்ப்பு கிடைத்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்