முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து தொடர் தான் மிகவும் சவாலானது

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பர்மிங்ஹாம், ஆக. 11 - எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இங்கிலாந்து தொடர் தான் மிகவும் சவாலானது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான மகேந்தி ர சிங் தோனி தெரிவித்தார். இது பற்றிய விபரம் வருமாறு - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்க்பாஸ்டன் நகரில் நே ற்று துவங்கியது. 4 டெஸ்ட் கொண்ட தொடரில், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 196 ரன் வித்தியாசத்திலும், நாட்டிங்ஹாமில் நடந்த 2 -வது டெஸ்டில் 319 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி மிகவும் மோசமாக தோற்று 0 - 2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. 

தொடரை சமன் செய்ய 3 -வது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெ ருக்கடி தோனி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது. இங்கிலா ந்து அணி டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடும். 

தோனி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு, இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது இல்லை. தற்போது முதல் முறையாக தொடரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு நம்பர் - 1 இடத்தையும் இழக்க நேரிடும். 

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய டெஸ்ட் தொடர் தான் தனது வாழ்நாளில் மிகவும் கடினமான தொடர் என்று தோனி கூறி இருக்கிறார்.  

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 -வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹமாம் நகரில் துவங்குவதற்கு முன்பாக நிரு பர்களைச் சந்தித்த கேப்டன் தோனி அவர்களிடம் கூறியதாவது - 

இந்த டெஸ்ட் தொடரில் வீரர்களுக்ககு ஏற்படும் தொடர் காயம், உட ல் தகுதி, பாதியில் இருந்து ஆட்டத்தில் வெளியேறும் நிலை, வீரர்கள் நல்ல நிலையில் இல்லாமல் மோசமாக ஆடுவது போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது. 

இதற்கு முன்பு எப்போதும், இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டது கிடையாது. ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுவது சவாலாக உள்ளது. ஒவ்வொரு ஆட்டத்திலும் வெவ்வேறு பிரச்சினை ஏற்படுகிறது. 

உள்ளூர் மைதானங்களில் நெருக்கடியில் வெற்றி பெறுவோம். தற் போதுள்ள நெருக்கடியில் எங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளது. இங்குள்ள ஆடுகளங்கள் சுழற் பந்து வீச்சிற்கு எந்த வகையிலும் கைகொடுக்கவில்லை. 

டெஸ்டில் 4 வேகப் பந்து வீரர்களை பயன்படுத்துவதா? என்பது பற்றி ஆடுகள தன்மையை பொறுத்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவ ர் கூறினார். 

தோனி தலைமையில் இந்திய அணி 7 டெஸ்ட் தொடரை (ஆஸ்திரேலி யா 2), இலங்கை, நியூசிலாந்து, மே.இ.தீவு, வங்காளதேசம் கைப்ப ற் றி உள்ளது. 3 டெஸ்ட் தொடர் (தென் ஆப்பிரிக்கா 2, இலங்கை) சமநி லையில் முடிந்து இருந்தது. ஒரு முறை கூட தோனி தலைமையில் டெ ஸ்ட் தொடரை இழந்தது இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்