முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவுப் பொருள் பணவீக்கம் 12.19 சதவீதமாக உயர்வு

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.12 - உணவுப் பொருள் பணவீக்கம் 12.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல எரிபொருட்களின் விலைகளும் 12.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜூலை 30 ம் தேதிமுதல் முடிவடைந்த வாரத்தில் உணவுப் பொருள் பணவீக்கம் முந்தைய வாரத்தைக் காட்டிலும் அதிகரித்துள்ளதாக புள்ளியியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 23 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.04 சதவீதமாக உணவுப்பொருள் பணவீக்கம் ஜூலை 30 ம்தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் 12.12 சதவீதமாக இருந்த எரிபொருட்களின் விலை குறியீட்டு எண் 12.19 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறியீட்டு எண் 12.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 10.99 சதவீதமாக இருந்தது. காய்கறிகள், பழங்கள், காப்பி, பயறுவகைகள், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் விலைகளும் கணிசமாக குறைந்துள்ளது என்று அந்த புள்ளிவிபர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்