முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய அரசு மக்களை கொல்கிறது - உத்தவ் தாக்கரே

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஆக.12 - மகாராஷ்ட்ர அரசு மக்களை கொல்கிறது என்று சிவசேனா கட்சியின் செயல்தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்ட்ர மாநிலத்தில் முதல்வர் பிருதிவிராஜ் சவுகான் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. புனே மாவட்டத்தில் உள்ள ஒரு நகரில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து சிவசேனா கட்சியின் செயல்தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவிக்கையில், இது ஒரு கொலைச் சம்பவம் என்றார். இந்த போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று மராட்டிய துணை முதல்வர் அஜித் பவாரும் மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலும் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கொடூரமான நடவடிக்கைக்கு பின்னணியாக இருந்தவர்கள் இனியும் தங்களது நாற்காலிகளில் அமர்ந்திருக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற மாவால் பகுதிக்கு சென்ற உத்தவ்தாக்கரே அங்கு துப்பாக்கிச் சூட்டில் பலியான 3 விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து ஆர்பாட்டம் செய்த விவசாயிகல் அலறி அடித்து ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை துரத்திச் சென்று போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். இது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. எனவே குற்றம் புரிந்த போலீசார் மீது மகாராஷ்ட்ர அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார். தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதா? என்றும் அவர் வினா எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago