முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் ரயிலில் குண்டு கண்டுபிடிப்பு -பயணிகள் தப்பினர்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி,ஆக.13 - அசாம் ரயிலில் குண்டு வைத்திருப்பதை தக்க சமயத்தில் போலீசார் கண்டுபிடித்து எடுத்துவிட்டனர். இதனால் அந்த ரயிலில் பயணம் செய்த 500-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து காமஹயா-புரி எக்ஸ்பிரஸ் ரயிலானது நேற்று அதிகாலையில் புரியை நோக்கி வந்துகொண்டியிருந்தது. ரயிலில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்துகொண்டியிருந்தனர். ரயிலானது மேற்கு கோயல்பாரா மாவட்டத்தில் உள்ள பஞ்சரத்னா ரயில்வே நிலையத்திற்கு அருகே வந்துகொண்டியிருந்தபோது ரயில் பெட்டிகளின் ஒன்றில் வெடிகுண்டு பதுக்கிவைத்திருப்பதை போலீசார் பார்த்து எடுத்தனர். உடனே அதை செயல் இழக்கச் செய்துவிட்டனர். காமஹயா-புரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே நாங்கள் விரைந்து சென்று பஞ்சரத்னா ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்து சோதனையிட்டோம். அப்போது ஒரு பெட்டியில்  ஒரு குண்டு இருப்பது தெரியவந்தது. இந்த குண்டு ஒரு சாக்கு பையில் வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது மிகவும் சக்திவாய்ந்த குண்டாகும். அதை, உடனே வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது என்று கோயல்பாரா மாவட்ட போலீஸ் அதிகாரி லூயிஸ் ஆய்ந்த் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் அந்த நபர் குண்டுவைத்தாரா? அல்லது இல்லையா என்பது தெரியவரும் என்றும் அந்த போலீஸ் அதிகாரி கூறினார். கடந்த ஜூலை 11-ம் தேதி அன்று இதே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 70 பேர் படுகாயம் அடைந்தனர். 

சுதந்திரதினத்தையொட்டி அச்சுறுத்துவதற்காக தீவிரவாதிகள் இந்த குண்டை வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சுதந்திரத்தினத்தை புறக்கணிக்கப்போவதாக 12 தீவிரவாத பிரிவுகள் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சுதந்திரத்தினத்தன்று 17 மணி நேர பந்த் போராட்டத்தையும் தீவிரவாத பிரிவுகள் அறிவித்துள்ளன. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையொட்டி வடகிழக்கு மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்