முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே படத்துடனான ராக்கி கயிறு அமோக விற்பனை

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      வர்த்தகம்
Image Unavailable

பாட்னா,ஆக.13 - தலைவர்களில் அண்ணா ஹசாரே படத்துடனான ராக்கி கயிறு நேற்று அமோகமாக விற்பனையானது. இன்று ரக்ஷபந்தன் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்களும் பெண்களும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் ராக்கி கயிறுகளை கட்டுவார்கள். இந்த ராக்கி கயிறுடன் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் படமும் இருக்கும். இந்தாண்டு பீகார் மாநிலத்தில் அண்ணாஹசாரேயின் படம் பொருத்தப்பட்ட ராக்கி கயிறுகள்தான் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. அதற்கு அடுத்தபடிதான் மற்ற தலைவர்கள் இணைக்கப்பட்ட ராக்கி கயிறுகள் விற்பனையாகின. மகேந்திர சிங் டோனியின் படம் உள்ள ராக்கி கயிறுகளை காட்டிலும் அண்ணா ஹசாரே படம் உள்ள ராக்கி கயிறுகள்தான் அதிக அளவு விற்பனையாகின. பீகார் மாநிலத்தில் முக்கிய தலைவர்களாக கருதப்படும் முதல்வர் நிதீஷ்குமார், முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் படங்கள் பொருந்திய ராக்கி கயிறுகள் எல்லாம் இரண்டாம்பட்சமாகத்தான் விற்பனையானது. அனைத்து தலைவர்கள் உள்ள ராக்கி கயிறுகளை காட்டிலும் அண்ணா ஹசாரே பெயர் உள்ள ராக்கி கயிறுகள்தான் அதிக அளவில் விற்பனையாகிறது என்று பாட்னாவில் உள்ள கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார். ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் அண்ணா ஹசாரே, மக்களிடத்தில் இடம் பிடித்துவிட்டார் என்றும் அந்த கடைக்காரர் கூறினார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர்கள் படமோ அல்லது பெயரோ ராக்கி கயிறு விற்பனையில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்