முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி மீது மாநில அரசு வழக்கு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத்,ஆக.14 - கலவரத்தின்போது செல்போன் உரையாடல் பதிவு செய்யப்பட்ட சி.டி.யை தாக்கல் செய்யாததால் குஜராத் மாநில ஐ.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா மீது குஜராத் மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையொட்டி வகுப்பு கலவரம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர்கள் படுகாயம் அடைந்தனர். கலவரம் நடந்தபோது செல்போன் உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த உரையாடல்கள் அடங்கிய சி.டி.களை சமர்ப்பிக்கும்படி சர்மாவுக்கு மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால் அதை அவர் சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனையொட்டி சர்மா மீது பா.ஜ. முதல்வர் நரேந்திர மோடி அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான குற்றச்சாட்டு பதிவும் சர்மாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மாநில அரசு செய்தி தொடர்பாளர் ஜெய்நாராயன் வியாஸ் நேற்று ஆமதாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை சர்மாவும் உறுதி செய்தார். சி.டி.களை சமர்ப்பிக்காததற்கு கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி நோட்டீசு அனுப்பப்பட்டது. பின்னர் இறுதியாக கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி சர்மாவுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு 15 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதில் 1969-ம் ஆண்டு அகில இந்திய சர்வீஸ் விதிமுறைகளின்படி சர்மா தவவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. கலவரத்தின்போது நடந்த செல்போன்கள் உரையாடல்கள் பதிவு செய்யப்பட்ட சி.டி. கேசட்டுகளை சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளிடம் சர்மா சமர்ப்பிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த விஷயத்தில் தலையிட மத்திய அரசு விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்றுமுன்தினம் கூறியிருந்தார். அவர் கூறிய மறுநாளே சர்மா மீது மாநில அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்