முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே உண்ணாவிரதம் - அமெரிக்க கருத்துக்கு எதிர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.14 - அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் ஊழலை எதிர்த்து அண்ணா ஹசாரே காந்தீய வழியில் போராடி வருகிறார். பலமான லோக்பால் மசோதாவை கொண்டுவரக்கோரி வருகின்ற 16-ம் தேதி மீண்டும் அண்ணா ஹசாரே டெல்லியில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயணன் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்க உள்ளார். இதற்கு முதலில் அனுமதி கொடுத்த டெல்லி போலீசார் தற்போது 3 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. 

இந்தநிலையில் ஜனநாயக ரீதியிலும் காந்தீய வழியிலும் லஞ்சத்தை ஒழிக்க போராடி வரும் அண்ணா ஹசாரே விஷயத்தில் இந்திய அரசு கொஞ்சம் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியூலாந்த் நேற்று வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார். உலகம் முழுவதும் அமைதியையும் அகிம்சையும் அமெரிக்கா எப்போதும் விரும்பும் என்பது உங்களுக்கு தெரியும். இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடாகும். ஊழலை எதிர்த்து அமைதியான முறையில் போராடும் விஷயத்தில் இந்தியா கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு விக்டோரியா பதில் அளித்தார். அமெரிக்க அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறியிருப்பதற்கு இந்தியா கோபம் அடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் இந்தியாவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதை கையாளுவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியிருப்பது குறித்து பத்திரிகைகளில் பார்த்தோம். இது அவருக்கு தேவையில்லாதது. இந்திய அரசியல் சட்டத்தில் பேச்சுரிமை, கருத்துக்கள் வெளியிடுதல், அமைதியான முறையில் கூட்டம் நடத்துவது, ஆகியவைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களும் அனுபவித்து வருகிறார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்