முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வி புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.14 - சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் 2011​- 12ம் கல்வியாண்டிற்கான மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி பாடபுத்தகங்கள் கிடைக்கும் இடங்கள் மற்றும் விலை விபரம் ஆகியவற்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விற்பனை பிரதிகள் தமிழ்நாட்டுப் பாடநுல் கழகத்தின் 22 மாவட்ட வட்டார அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.  மேற்படி பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கான விலை கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வகுப்பு - தொகுப்பு (செட்) புத்தகங்களின் எண்ணிக்கை- பாடங்களின் விவரம்- விற்பனை  விலை (செட்) வருமாறு:-

1 - 4 - தமிழ், ஆங்கிலம், கணக்கு சூழ்நிலையியல் -ரூ. 200,  2 - 4 - தமிழ், ஆங்கிலம், கணக்கு சூழ்நிலையியல் - ரூ.200,  3 - 5 - தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் -ரூ.250,  4 -5 - தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் -ரூ.250,  5 -5 - தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் -ரூ. 250,   6 -5 - தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் -ரூ. 250,  7 -5 - தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்-ரூ.300, 8 -5-தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்-ரூ.300, 9 -5 -தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்-ரூ.350,  10 -5 - தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் - ரூ.350 ஆகும்.

மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகள் தங்களுக்குத்  தேவையான பாடநூல்களை வட்டார அலுவலகங்களிலிருந்து தொகுப்பாக பெற்றுக் கொள்ளும்போது அவர்களுக்கு விற்பனை விலையில் ரூ 5 கழிவு வழங்கப்படும் என  தெரிவிக்கப்படுகிறது. பாடநூல்களுக்கான தொகையை தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டார அலுவலகத்தின் ஊரின் பெயரில் வங்கி வரைவோலைமூலம் செலுத்தி புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை​- 6  கல்லுரிச்சாலையில் செயல்பட்டுவரும் தமிழ்நாட்டுப் பாடநுல் கழகத்தின் விற்பனை மையத்தில்  தனிப்பிரதிகள் சில்லரை விற்பனைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

தனிப்பிரதியின் சில்லரை விற்பனை விலை விபரம் வருமாறு :

1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை - பிரதி ஒன்றின் விலை ரூ.60/-, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை  - பிரதி ஒன்றின் விலை ரூ.65/-, 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு - பிரதி ஒன்றின் விலை ரூ.75/-.​ஆகும். இவ்வாறு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்