முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

65வது சுதந்திர தினம் சென்னை கோட்டை கொத்தளத்தில் ஜெயலலிதா கொடியேற்றுகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 15 - தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவின்போது காலை 9.30 மணிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். 65வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்திலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் ஜெயலலிதா கொடியேற்றி வைக்கிறார். அதே போல் மாவட்டங்களில் உள்ள தலைமையகங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்கள். நிகழ்ச்சியில் ஏழை, எளிய நலிந்த மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.  நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள். நிகழ்ச்சிக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

சுதந்திர தின விழாவையொட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை  கோட்டை கொத்தளத்தின் முன்பாக உள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடைக்கு  வருகிறார்.  தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி முதல்வரை வரவேற்று, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா பகுதி தலைமை தரைப்படை தலைவர், சென்னை கடற்படை பொறுப்பு அதிகாரி, தாம்பரம் வான்படை அதிகாரி, கடலோர காவல் படை கமாண்டர் (கிழக்கு மண்டலம்), காவல்துறை இயக்குநர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் திரிபாதி ஆகியோரை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இன்று நடைபெறும் முதல்வர் ஜெயலலிதா திறந்தவெளி ஜீப்பில் காவல்துறையின் அணி வகுப்பினை பார்வையிடுகிறார். 

பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா 9.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திரத் திருநாள் உரையினை நிகழ்த்துகிறார். பின்னர் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான 6 விருதுகள் மற்றும் மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான 2 விருதுகள் ஆகியவற்றினை வழங்குகிறார். பிறகு, கோட்டை நுழைவுவாயில் அருகே உள்ள பந்தலில் அமர்ந்துள்ள மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்குவார். 

சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு வருகை தரும் அழைப்பாளர்களின் வசதிக்காக சிவப்பு மற்றும் நீலம் ஆகிய 2 வர்ணங்களில் வாகன அனுமதி அட்டைகள் வழங்கப்படும். சிவப்பு நிற வாகன அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் போர் நினைவு சின்னம் வழியாக வந்து கோட்டை கொத்தளத்தின் முன்னால் முக்கிய அழைப்பாளர்கள் அமர இருக்கை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அழைப்பாளர்களை இறக்கியபின்னர்  வாகனத்தை உள் நுழைவு வாயில் வழியாக புனித ஜார்ஜ் கோட்டையின் உள்ளே உள்ள பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்திக் கொள்ளலாம். நீலநிற அனுமதி அட்டை பெற்ற வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகவோ அல்லது புனித ஜார்ஜ் கோட்டை வாயில் வழியாகவோ வந்து ராஜாஜி சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மாடத்தை வந்தடைய வேண்டும். சிறப்பு மாடத்தின் அருகே அழைப்பாளர் இறங்கிக் கொண்டதும் இந்த வாகனங்களை புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிரே அமைந்துள்ள வாகன நிறுத்தப் பகுதியில் நிறுத்தி கொள்ள வேண்டும். 

அழைப்பாளர்களின் வசதிக்காக புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலும் மற்றும் அதற்கு எதிரே உள்ள கார் நிறுத்தப் பகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை ஒலிபெருக்கி மூலமாக அழைத்திட ஒலி அழைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வாகனங்களின் இயக்கத்தையும் முறைப்படுத்தி எவ்வித இடையூறும் இல்லாத வகையில் சீரான போக்குவரத்து, போக்குவரத்து காவல் துறையினரால் முறைப்படுத்தப்படும்.       ஜெயலலிதா கொடியேற்றுகிறார்

சென்னை, ஆக.- 15 - தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவின்போது காலை 9.30 மணிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். 65வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்திலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் ஜெயலலிதா கொடியேற்றி வைக்கிறார். அதே போல் மாவட்டங்களில் உள்ள தலைமையகங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்கள். நிகழ்ச்சியில் ஏழை, எளிய நலிந்த மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.  நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள். நிகழ்ச்சிக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

சுதந்திர தின விழாவையொட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை  கோட்டை கொத்தளத்தின் முன்பாக உள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடைக்கு  வருகிறார்.  தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி முதல்வரை வரவேற்று, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா பகுதி தலைமை தரைப்படை தலைவர், சென்னை கடற்படை பொறுப்பு அதிகாரி, தாம்பரம் வான்படை அதிகாரி, கடலோர காவல் படை கமாண்டர் (கிழக்கு மண்டலம்), காவல்துறை இயக்குநர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் திரிபாதி ஆகியோரை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இன்று நடைபெறும் முதல்வர் ஜெயலலிதா திறந்தவெளி ஜீப்பில் காவல்துறையின் அணி வகுப்பினை பார்வையிடுகிறார். 

பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா 9.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திரத் திருநாள் உரையினை நிகழ்த்துகிறார். பின்னர் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான 6 விருதுகள் மற்றும் மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான 2 விருதுகள் ஆகியவற்றினை வழங்குகிறார். பிறகு, கோட்டை நுழைவுவாயில் அருகே உள்ள பந்தலில் அமர்ந்துள்ள மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்குவார். 

சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு வருகை தரும் அழைப்பாளர்களின் வசதிக்காக சிவப்பு மற்றும் நீலம் ஆகிய 2 வர்ணங்களில் வாகன அனுமதி அட்டைகள் வழங்கப்படும். சிவப்பு நிற வாகன அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் போர் நினைவு சின்னம் வழியாக வந்து கோட்டை கொத்தளத்தின் முன்னால் முக்கிய அழைப்பாளர்கள் அமர இருக்கை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அழைப்பாளர்களை இறக்கியபின்னர்  வாகனத்தை உள் நுழைவு வாயில் வழியாக புனித ஜார்ஜ் கோட்டையின் உள்ளே உள்ள பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்திக் கொள்ளலாம். நீலநிற அனுமதி அட்டை பெற்ற வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகவோ அல்லது புனித ஜார்ஜ் கோட்டை வாயில் வழியாகவோ வந்து ராஜாஜி சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மாடத்தை வந்தடைய வேண்டும். சிறப்பு மாடத்தின் அருகே அழைப்பாளர் இறங்கிக் கொண்டதும் இந்த வாகனங்களை புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிரே அமைந்துள்ள வாகன நிறுத்தப் பகுதியில் நிறுத்தி கொள்ள வேண்டும். 

அழைப்பாளர்களின் வசதிக்காக புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலும் மற்றும் அதற்கு எதிரே உள்ள கார் நிறுத்தப் பகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை ஒலிபெருக்கி மூலமாக அழைத்திட ஒலி அழைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வாகனங்களின் இயக்கத்தையும் முறைப்படுத்தி எவ்வித இடையூறும் இல்லாத வகையில் சீரான போக்குவரத்து, போக்குவரத்து காவல் துறையினரால் முறைப்படுத்தப்படும்.       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்