முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறுவதா? கருணாநிதிக்கு ஒ.பன்னீர்செல்வம் கண்டனம்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. - 15 - தனக்குத் தானே கேள்விகளை கேட்டுக் கொண்டு, அதற்கு பதில்களை அளிப்பதை பொழுதுபோக்காக கொண்டுள்ள கருணாநிதி, கண் துடைப்பு, கபட நாடகம் எது? என்ற தலைப்பில் மனம் போன போக்கில், சில புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். அமைச்சரவை இலாகா பட்டியலை படிக்காமல் அரைகுறை அறிக்கையை வெளியிட்டிருக்கும் கபடதாரி கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

இதுகுறித்து  நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இதில் உள்ள உண்மை நிலையை எடுத்துக் கூறுவது எனது கடமை என கருதுகிறேன். கருணாநிதி தன்னுடைய கேள்வியும் நானே, பதிலும் நானே அறிக்கையில்,   விஜிலென்ஸ் துறையை முதல்வர் ஜெயலலிதா வகித்துக் கொண்டிருப்பதாகவும், அந்தத் துறையை வைத்துக் கொள்வது நியாயமில்லை என்றும்  கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற 16.5.2011 அன்று முதலே ஊழல் தடுப்பு இலாகா சட்டத் துறை அமைச்சர் வசமே இருந்து வருகிறது. இது மட்டுமல்லாமல்,  ஜெயலலிதா 2001 முதல் 2006 வரை முதலமைச்சராக இருந்த போதும், ஊழல் தடுப்பு இலாகா என் வசம் தான் இருந்தது என்பதையும் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற பழமொழிக்கேற்ப, ஆட்சி அதிகாரமும் போய்விட்டது, குடும்ப உறுப்பினர்களும், தனது அமைச்சரவை சகாக்களும் ஒவ்வொருவராக ஜெயிலுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் என்ற விரக்தியில், உண்மை விவரங்களை தெரிந்து கொள்ளாமல் உளறலின் உச்சகட்டத்திற்கு கருணாநிதி சென்று இருக்கிறார்.  கருணாநிதி மேலும் தன்னுடைய அறிக்கையில், கேரள முதல் அமைச்சர் மீது விஜிலென்ஸ் குற்றச்சாட்டு எழுந்ததுமே அந்தத் துறையின் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டுவிட்டதோடு, விசாரணையை சந்திப்பதாக அவர் தெரிவித்து இருப்பதாக கூறி இருக்கிறார்.  தன் மீதுள்ள பல ஊழல் குற்றச்சாட்டுக்களை nullநீதிமன்றத்திற்கு சென்று சந்திக்க திராணி இல்லாமல், தனக்குத் தானே நீnullதிபதியாக செயல்பட்டு அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்ற கருணாநிதி, தன் மகன் மு.க.அழகிரி சம்பந்தப்பட்ட தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்யாத கருணாநிதி, கேரள முதலமைச்சரை உதாரணம் காட்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.  முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில், தன் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் நீnullதிமன்றத்தில் துணிச்சலுடன், நேர்மையாக சந்தித்து வருவதுடன், இதுவரை 13​க்கும் மேற்பட்ட வழக்குகளில் வெற்றி பெற்று இருக்கிறார்.  முதல்வர் ஜெயலலிதா  நினைத்திருந்தால் தன் மீதுள்ள வழக்குகளை கருணாநிதி போல் கொல்லைப் புற வழியாக அப்பொழுதே திரும்பப் பெற்றிருக்கலாம்.  ஆனால், முதல்வர் ஜெயலலிதா அதைச் செய்யாமல், துணிச்சலுடன், நேர்மையாக தன்மீது கருணாநிதியால் புனையப்பட்ட வழக்குகளை நீnullதிமன்றத்தில் சந்தித்து வருகிறார். எனவே, ஜெயலலிதாவிற்கு  கருணாநிதி பாலபாடம் கற்பிக்கத் தேவையில்லை.

  இதே கேள்வி -​பதில் அறிக்கையில் இன்னொரு புளுகு மூட்டையையும் அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.  முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அன்றைய பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா சொன்னதாகக் குறிப்பிட்டு, இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் புகைப்படத்தை காட்டி அன்றைய பேரவைத் தலைவர் பதில் அளித்ததாகவும் கூறியிருக்கிறார் கோயபல்ஸ் கருணாநிதி.  இது முழுப் nullசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். உண்மை நிலை என்னவென்றால், முதல்வர் ஜெயலலிதா  11.1.2010 அன்று சட்டமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை என்பது தான் முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டினை மறுக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதா அன்றைய பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு அவர் பதில் அளிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படம் 20.1.2010 தேதியிட்ட மாலை மலர் நாளிதழிலும்,  21.1.2010 தேதியிட்ட தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கல் போன்ற ஆங்கில நாளிதழ்களிலும் வெளியானது. ஆனால், அன்றைய பேரவைத் தலைவரின் சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்த வண்ணப் புகைப்படம் வெளிவந்த உடனேயே, அந்த வண்ண புகைப்படத்தில் தான் அணிந்திருந்த புடவையின் நிறம் கருஞ் சிவப்பு (க்ஷசடிற) என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, 11.1.2010 அன்று சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது கருநீnullல நிறம் (சூயஎல க்ஷடரந) கொண்ட புடவை அணிந்திருந்ததாகவும் எடுத்துக் கூறினார்கள். இந்தச் செய்தி அன்றே அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது. தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. இப்படி பொய்மையின் உருவமாக விளங்கும் உலக மகா ஊழல் மன்னர் கருணாநிதி சொல்வதையெல்லாம் தீர ஆராயாமல், அப்படியே தி இந்து, டெக்கான் கிரானிக்கல், தினமணி, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பொறுப்பு வாய்ந்த பத்திரிகைகள் எல்லாம் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவது வருந்தத்தக்கது.  இனி வருங் காலங்களில், கருணாநிதி விடும் அறிக்கைகளை எல்லாம் அப்படியே நம்பி வெளியிடாமல் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அதன் அடிப்படையில் செய்திகளை வெளியிடுமாறு அனைத்துப் பத்திரிகைகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  

இவ்வாறு அறிக்கையில் ஒ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்